பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 141

ருக்மிணிக்கு அமைதியை நல்க அவள் நெஞ்சம் அனுமதிக்கவில்லை.பாவம்,ருக்மிணி! எங்கேயோ, னதையோ கண்டு மருண்டு விட்டாள்; பயந்து விட்டாள்! ஒரு நாள், தலைவிரி கோலமாக அவள் தன்னுடைய குழந்தை அலுமேலு முன் வந்து நிற்க, அலமு அரண்டு மிரண்டு அலற, அவள் அலமுவைத் துரத்த, அலமு அலறிப்புடைத்து ஒட, கடைசியில் தரையோடு தரையாக இருந்த அந்தத் தண்ணிர்த் தொட்டிக்குள்ளே விழுந்து மடிய, பயங்கரமான இவ்விபத்தின் துர்ப்பாக்கிய மான எதிர் விளைவாக, ருக்மிணியின் அரைப் பைத்தியப் போக்குகள் வளர்ந்து, உச்சம் அடைய வும் நேர, முடிவிலே, ருக்மினியைச் சட்டத்தின் விதிப்படியோ, விதியின் சட்டப் பிரகாரமோ விவாகரத்துச் செய்யவும் நேரிட்டது.

இப்போது, கணேசனுக்கு இரண்டாம் துணையாகக் கிட்டியவள் ஜெயந்தி.

சித்தம் சுவாதீனம் இழந்து தவித்த ருக்மிணி, இடையில் நிகழ்ந்த நடப்புக்களில் எதையுமே அறியாதவள். ஆனாள்.

விதியின் விளையாட்டுக்கும் ஒர் உச்சக் கட்டம் அமைந்தது.

உடல் மற்றும் உளப்பண்புகளையும் உரத் தையும் பாதிக்கும் பெண்களுக்கே உரியதான மனநோய் தீர்ந்து, குணம் அடையும் ருக்மிணி. இப்போது, சுயப்புத்தியையும் சுய உணர்வையும் சுயச் சிந்தனையையும் மீட்டுக் கொண்ட நிலை யில்தான், தன்னுடைய அலங்கோலங்களுக்கெல் லாம் காரணமாக அமைந்திட்ட தனது சித்தப் பிரமை பற்றியும் அறிந்தாள். இல்வாழ்வின் பங்காளியைச் சட்டம் பிரித்தது; உயிர்ப் பாசத்