பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

பாரதக் குடி குடிமகனும் எளிதிலே மறந்துவிட முடியாது. ‘அவன் காலத்தை வென்றவன்; அவன்”, ஆண்ட வனுக்குச் சமதை. ஊகூம், அவனுக்கும் ஒருபடி மேம் பட்டவன். ஆண்டவனுக்கு பாரதி மாதிரி அவ்வளவு நாட்டுப் பாசத்தோடு கவிபாடத் தெரிந்திருக்குமா?யார், சிரிப்பது?-அவன் தான் சிரிக்கிறானா?இல்லை!- ஒ! நீங்கள் தானே? உங்கள் சிரிப்பும் எனக்குத் தெரியும்!...

“யாதுமாகி கின்றாய், காளி,

எங்கும் நீ நிறைந்தாய் ! தீது நன்மை யெல்லாம், காளி,

தெய்வ லீலை யன்றோ ? பூதமைந்தும் ஆனாய், காளி,

பொறி களைந்தும் ஆனாய் ! போதமாகி நின்றாய், காளி,

பொறியை விஞ்சி நின்றாய் ! இன்பமாகி விட்டாய் காளி,

என்னுள்ளே நீ புகுந்தாய் ! பின்பு நின்னை யல்லால், காளி !

பிறிது நானும் உண்டோ ? அன்ப ரித்து விட்டாய், காளி ! ஆண்மை தந்து விட்டாய் ! துன்பம் நீக்கி விட்டாய், காளி !

தொல்லை போக்கி விட்டாய் !” மனதுக்கு மனம்தான் சாட்சியாக ஆக முடியும்; ஆகவும் வேண்டும் !

மனித இனத்திலே, தமிழச் சாதியினைச் சார்ந்த ருக்மிணி, சராசரியான மனிதப் பிறப்புக்குரிய பலங்களை யும் பலவீனங்களையும் ஒருங்கே கொண்டு, சராசரிப் பெண்ணாக விளங்கினாள்; ஆதலாலேதான், வாழ்க்கை யின் சுகதுக்கங்களும், லாப நஷ்டங்களும், ஆசாபாசங் களும், தாகத்தாபங்களும் மனித விதியின் ஆணையின்