பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 145

கீழே அவளையும் எதிர்கொள்ளுகின்றன. நேர் கொண்ட பார்வையால் அனைத்தையும் வரவேற்கிறாள்; எதிர்க்க வும் செய்கிறாள். அவள் தன் வாழ்க்கையில் அடைந்த இனிப்பை விடவும், அனுபவித்த கசப்புத் தான் தீவிர மடைய நேர்ந்தது; தெளிந்தபின் மனமே, துயரம் கொள்ளாதே’ என்று சித்தர் பராமரிப்பில் பாடப்படும் பாடலைக் கேட்டிருந்தாலும், மனத் தெளிவிலே தான் அவள் துயரங்களைச் சீரணிக்கவும் வாய்க்கிறது. விதிக்கு. மருந்து இல்லை என்பார்கள் பெரியார்கள்; அதாவது, பெரியவர்கள். அதொப்பவே, மனத்தின் நோய்க்கும் மருந்து இல்லையென்று சொல்லிவிட முடிகிறதா முடி வதில்லை. மனத்திற்கு மனமே சாட்சியம் ஆவது மாதிரி, மனத்துக்கு மனமே மருந்தாகவும் ஆகிறது: ஆகவும் வேண்டும்! மனம் கொண்டதும் மாளிகை; மனம் கண்டதும் மாளிகை தானே ?-பின், மனமே மனத்திற்கு அருமருந்தாக ஆவதும் இயல்புதான்; ஆக வேண்டியதும் நியதி! எங்கேயோ காண நேர்ந்த அச் சுறுத்தக் கூடிய காட்சி ஒன்றில், அவளுடைய நல்ல. அமைதி பூத்த இதயம் பீதியால் அலைபாய்ந்தது. அலைக்கழிக்கப்படுகிறது. அப்பயமும் பிரமையும் அவளை ஆட்டிப்படைப்பதால், அவளுடைய பூலோக வாழ்க்கையும் சின்னபின்னம் அடைகிறது. ஆட்டுவித் தால், ஆடாதார் யாரே உளர்?-ஆகவே தான், அவளும் ஆட்டுவிக்கப்படுகிறாள்; ஆட்டிப்படைக்கவும் படு: கிறாள் ! - மகரிஷிக்கு மாத்திரமல்ல உங்களுக்கும் எனக்கும், ஏன்; நமது நல்ல தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளருக்கும் கூட, ஒரு நல்ல கதை கிடைத்தது: ஓர் ஆச்சரியக் குறியில் ஒரு கேள்விக்குறி :

மஞ்சள் இலக்கியத்தின் முடிசூடாத மன்னர் களுக்கும் முடிசூடிய-முடிசூட்டிய மன்னிகளுக்கும் மத்தியிலே தான் மகரிஷியும் ஆரோக்கியமான எழுத்துப் பணிகளைத் தொடர்த்து வருகிறார். மின்னும் பொன்