பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 147

மனம் சந்தோஷப்படுகிறேன். ஜெயந்தி, எது என் உள்ளத்தில் பெரும் சுமையாக இது நாள் வரை அழுத்திக் கொண்டிருந்ததோ, அந்தப் பாரம் இறங்கி விட்டது. இப்பொழுது என் மனம் ரொம்ப லேசான மாதிரி இருக்கு. இதுவே எனக்குப் போதும் இதற்கு மேல் வேறு எதுவும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதோ ஜம்புலிங்கேஸ்வரரின் கோபுர நிழலடியில் நின்றுகொண்டு நானும் சொல்கிறேன். இனி, என்னால் அங்கே வந்து உங்களுடன் இருக்க முடியாது. அந்த இடத்திற்கு இனி நான் முற்றிலும் தகுதியற்றவள் !”

பேசிக்கொண்டே வந்த ருக்மிணி ஒர் இடத்தில் நின்று விட்டாள்.

ஜெயந்தி, இன்னைக்குத் தேதி வைகாசி எட்டு இல்லியோ ? சமயபுரம் முத்துப் பல்லாக்கு ஞாபகமில்லே. நான் போய்ட்டு வரேன். ராத்திரி எந்நேரமானாலும் பல்லக்கு பார்த்துவிட்டுத்தான் வருவேன்.” .

ஜெயந்தியின் மறுமொழிக்குக் காத்திராமல், ருக்மிணி சமயபுரம் நோக்கிப் புறப்பட்டு விடுகிறாள்.

வாழ்க்கை வீதியில் நவீனம் :

வாழ்க்கையைச் சொல்வதும், சொல்லிக் காட்டுவதும் நாவல்.

ஒரு நவீனத்துக்கு ஒரு வாழ்க்கை போதும் தாராள மாகவே போதும். ;

வாழ்க்கையில் ஒரு பாத்திரமே, உயிரும் உயிர்ப்பும், உள்ளமும் உணர்வும் பூண்டு, முனைப்படைந்து, வாழ்க்கையை விதியின் பகைப் புலனில் நடத்திச் செல்லும் ; அப்பாத்திரம் ஆணானாலும் சரி, பெண்ணா னாலும் சரி, இல்லை, குழந்தையர்ன்ாலும் சரி, குறிப்