பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 153

தின் வதியாக மட்டுமல்லாமல், சமூகத்தின் மனிதர்களின் விதியாகவும் விளங்கும் - இவ்விதியின் விதியிலும் இவ் விதியின் வினையிலும்தான், சமுதாய அமைப்பின் பாதிப்புக்களாகச் சிந்தியும் சிதறியும் ஒளிந்தும் ஒளியா மலும் இதே சமுதாய வீதிகளிலேயே விளையாடிக் கொண்டும், விளையாட்டுக் காட்டிக் கொண்டும் இருந்து வருகின்ற சீர்கேடுகள் களைந்தெறியப்பட்டு ஒழுங்குபட முடியும் ; ஒழுக்கம் பெறவும் இயலும் :- இந்த விடிய லில் தான் சமுதாயத்தின் மறுமலர்ச்சிப் புது வாழ்வே அடங்கியிருக்கிறது : தமிழ்ச் சமுதாயத்தின் மரபு வழுவாத பண்பாட்டின் அடிப்படையிலான சீர்திருத்தத் தில்தானே தமிழ்ச் சமுதாய மக்களின் மேன்மையும் சீர்மை யும் அடங்கியிருக்கின்றன ! ஆகவே, இன்றைய நடப்பில், சமூக நல வாழ்வுக்குக் கைக்கு மெய்யாகத் தேவைப் படுபவை ஆக்கப் பூர்வமான சிந்தனைகளும் ஊக்கப் பூர்வமான செயல்களும்தான் !...

“...தொல் காப்பியம் பொருளோடு புணர்ந்த நகை மொழி என்பதாகவே புதினத்திற்கு ஒர் எல்லையைச். சுட்டும் ; புனைகதைப் புதினம் சமூகத்திற்குக் கண்ணாடி: சமூகத்தின் கண் ஆடி’யும் அதுவே - ஆதலால்தானே, அது சமூகத்தின் ஆன்மாவாகவும் ஆகிறது ?- ஆகவும் முடிகிறது - ஆன்மா, நினைவிருக்கட்டும். ஆன்மா வேறு உள்ளம் வேறு இல்லையா ? ஆன்மாவுக்கு மரணம் கிடையாது - கீதைக் கண்ணன் கீதம் இசைத்திட வில்லையா, என்ன ?... . .

“...உயிரைப் படைப்பவன் ஆண்டவன். உள்ளத்தைப் படைப்பவனோ மனிதன். உயிரும் உள்ளமும் இரண்டறக் கலந்து, பக்குவமும் பண்பாடும் கொண்டு வளர்ந்து வாழத் தொடங்கும்போது, ஆன்மா சிறக்கும் ; நிறக்கும். ஆன்மாவின் வளத்தை, வனப்பை, வாழ்வை,வரலாற்றைப் பிரதிபலிக்கக் கூடியதும், பிரதிபலிக்க வேண்டியதும் சமுதாயம் அல்லவா ?- மெய்தான் ! மெய்யும் பொய்யு.