பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

மாக- மெய்மையும் பொய்மையும் கலந்த நிலையற்றதும் நிரந்தரமற்றதுமான மண்ணுலக வாழ்க்கையைத் தவிர்க்க முடியாத ஒரு விதியாகவும் தப்பிக்க இயலாததொரு வினையாகவும் மேற்கொண்டு விடுகிற இந்த மனிதர் களுக்கு இந்தச் சமுதாயத்தில் அருளப்படும் இடம் என்ன? பங்கு என்ன ? பணி என்ன ?

“சமுதாயம்தான் மனிதன் மனிதன்தான் சமுதாயம்!-- மனிதன் தவறு இழைத்தால், அது சமுதாயத்தை பாதிப் பதும், சமுதாயம் பாதிக்கப்பட்டால், மனிதன் பாதிக்கப் படுவதும் சகஜம் - எனவேதான், வாழ்க்கை என்னும் விளையாடலில் மனிதனும் மனிதச் சமுதாயமும் ஒன்றில் ஒன்றாகப் பிணையவும் ஒன்றோடு ஒன்றாக இணையவும் நேருகிறது. இந்நிலையில், மனிதன், தான் தவறு செய்து விட்டு, அந்தப் பாவத்தை- பழியைச் சமூகத்தின் பேரில் போட்டுவிட்டு, ஏ, தாழ்ந்த சமூகமே !’ என்று வசனம் பேசிவிட்டுத் தான் தப்பிக்க முயலுவது, அம்மனிதனின் சார்புடைய சமுதாயத்துக்கு அவன் இழைக்கின்ற துரோக மாகவும் அமைந்து விடாதா ? ஆகவே, சமூகம் பண்போடும் நெறியோடும் முறையோடும் மேன்மையும் மேம்பாடும் அடைந்திடவேண்டுமேயானால், சமூகத்தின் மனிதனும் அவ்வாறே பண்புடனும், முறையுடனும் நெறி யுடனும் வாழ்வதும், வாழ வேண்டியதும் அவனது சமுதாயக் கடமையாகவும் ஆகிறது :- சமூகத்திலே மனிதன் ஒர் அங்கம் தான் என்றாலும், மனிதன் சொந்த முறையில் செய்கிற அநியாயத்துக்கும் பாவத்துக்கும் குற்றங்களுக்கும் அம்மனிதன் சார்ந்த சமூகம் அம்மனித னுக்காகவோ, அல்லது, அவனது சார்பாகவோ எவ்வகை யிலும் பொறுப்பேற்க முடியாதுதான்!- அது நியாயமும் இல்லை . ஏன், சமூக விதியோ அல்லது நியதியோ இல்லையே ? சமுதாயத்தின் நடைமுறை அமைப்பில் சிதறி விழுந்து ஆழப் பதிந்து விடுகிற கீறல்களால் சமூகத் தின் பாற்பட்ட மாந்தர்கள் பாதிக்கப்பட்டு விடுவதாகக்