பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 161

வில்லிங்ஸ்டன் என்ற கனவான் ஒருவர் : அமெரிக்கப் பிரஜை ; கர்நாடகச் சங்கீதத்தில் பித்தன் ; பித்தர். “நான் விரும்பின ஒரே ஆள் ஜான்ஃப்ரெட்ரிக் வில்லிங்க்ஸ்டன் ‘ என்று விஜியே மனத்தைத் திறந்து ஒப்புக் கொள்ளும் அவளுடைய மனதான மனத்தில் வலுவான ஒர் அருமையான-பெருமையான இடத்தை ஆக்கிர மித்துக் கொண்ட பாக்கியசாலிப் புள்ளி.

அப்பால், ராம் மனோகர் என்கிற வாத்ஸல்யமான பேரைச் சூட்டிக் கொண்ட பித்துக்குள்ளி ஒன்று.

கடைசியாக, நாகப்பன், அசலான காதல் பைத்தியம். கிறுக்குக்குப் பட்டம் ஒரு கேடாக் கும் பட்டம் அறுகிறது ; அறுக்கப்படுகிறது. ‘கடைக்கு அனுப்பிச்சு வியாபாரம் கத்துக் குடுத்தா, கயவாளித்தனமா பண்றே : செட்டிப் பிள்ளை வட்டம் தாண்டப்படாது.டா அடுக்குச் இரும் அறுபது பவுனுமாய்ப் பொண்ணு வளர்ந் துக்கினு இருக்கு; பாப்பாத்தி பின்னாடி சுத்த lயே ?” கடைசிவரை, காதலுக்குப் பொருள் என்னவென்று பொருள் பொதிந்த நாகப்பனுக் குச் சொல்லிக் கொடுக்கவில்லை. வி.ஜி.

அப்புறம்...?

ஊம் ரங்கா நல்லவர் ; குழந்தை மாதிரி, ஆகவே, அந்த மனிதருக்குக் குழந்தை ஆசை உண் டானதில் தவறு இருப்பதற்கில்லை. ஆனால், விஜிக்கு உண்டாக வேண்டு'மென்று ஒர் ஆசை, சட்டென்று உண்டாகக் கூடாதோ ? காலங் கடந்த அவளது, அவர்களது திருமணத்தைப் போலவே, குழந்தை ஆசையும் அவளுக்கு உண் டானது ; உண்டாக்கப்பட்டது. .