பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

என்பதற்கு அர்த்தம், இனிமேயாவது ஒழுங்கா இரு!” என்பதுதான்! நான் அதற்குத் துடுக்காப் பதில் சொன் னால், கல்யாணம் பண்ணியும் அவுசாரி என்கிற வசவு தான் கிடைக்கும்!”

விஜி இப்போது பாசுரத்தைப் பிரித்து ஆண்டாளைத் தேடுகிறாள். வாரணமாயிரம் படித்துக் கொண்டே போனால், சகலமும் நல்லபடியாகவே முடியுமென்பது அத்தையின் வாக்கு. ஆனாலும், அவளுக்கு ஆண்டாளின் குயில் பத்து தான் நிரம்பப் பிடிக்கும். ஆகவேதான், அவளுடைய நெஞ்சின் அலைகள், நினைவின் அலைகளாக அலைமோதி ஆர்ப்பரித்து ஆடம்பரமாக ஆரவாரம் செய்யத் தொடங்கிவிடுகின்றன; மனமே மனச்சாட்சி யாகிக் சிலிர்க்கவும் ஆரம்பித்து விடுகின்றது :

“...அடர்த்தியான தோப்புக்குள்ளே கோவிந்தனைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி, ஆண்டாள் குயிலைத் து து விடுகிறாள்...சின்னப் பெண்ணின் ஏக்கம் பத்துப் பாட்டிலும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. பதிமூணு வயசுப் பொண்ணா...?-இன்றைக்குள்ள பெண்ணாயிருந்தால், எட்டாவது படித்துக் கொண் டிருக்கும். உடம்பும், கண்ணும், வயசும், மனசும் மலரப் புதிதாய் விழிக்கிற பருவம். தனித்திருக்கப் பிறக்கவில்லை. யாருடனோ சேர்ந்திருக்கவே பிறந்திருக்கிறோம். அப்படிச் சேர்ந்திருப்பது ஆணாய், அழகனாய் கட்டிக் காபத்து செய்கிறவனாய், என்ன வந்தாலும் கவலை வேண்டாம், நான் இருக்கிறேன்’ என்று சொல்லு பவனாய், தயை நிரம்பியவனாய், புருஷனாய் ஒரு நபரைத் தேடத் துவங்கிவிட்ட சமயம்; துணை என்பது இதுவேயென்று கற்பிதம் செய்து கொள்ளும் பருவம், உறவும் உலகமும் இதைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன்னால், உடம்பிலுள்ள ஹார்மோன்'களும் இந்தத் தேடலை அறிவிக்க ஆரம்பித்து விடுகின்றன. ஆண்டாள் அதீதமாய்க் கவலைப்பட்டிருக்கிறாள். ‘என் துணை, என்