பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 165

துணை, என் துணை’ என்று புலம்பியிருக்கிறாள் ; பிச்சியாய் அலைந்திருக்கிறாள். அந்த வயசு அப்படிப் பட்டது! தேடல் என்கிற விஷயமே நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டதுதானே ? கிடைக்கும் என்பதால் தானே தேடுகிறோம்?... என் பதிமூணு வயசும் ஆண்டாள் மனசு மாதிரி ரம்மியமாகத்தான் இருந்தது. நான் அவனைச் செய்வனே காணே !’ என்று என் மனசும் ஆசைப்பட்டது !...

அப்புறம், விஜயலக் மியைப் பொறுத்த மட்டில், மட்டில்லாமல் என்னவெல்லாமோ நடந்து, அவளும் எப்படியெல்லாமோ, நடந்து இப்போது இந்த முப்பத் தாறாவது வயசில் நாற்பது வயதுடைய ரங்கா என்கிற ஆண்பிள்ளையின் துணைவி என்னும் பதவியை ஏற்றுக் கொள்ளத் தயாராகி, தன்னைத் தயார் நிலைக்கு ஆளாக்கிக் கொண்டவளாய், கல்யாணச் சத்திரத்தில் கல்யாணப் பெண்ணாகக் காட்சித் தருகின்ற இந்நேரத் திலும் அவளது உள் மனம் உள்வட்டச் சுழிப்பினின்றும் இன்னமும் விடுதலை பெறமுடியாமல் தத்தளித்துக் கொண்டேயிருக்கிறது. அவள் உணர்வுகள் மேலும் கீழு மாகப் பதறியும் சிதறியும் தவிக்கின்றன. உடம்பில், ரத்தத்தில் கலந்து, அங்கங்கள் வளர்ச்சியடையத்துண்டும் உட்சுரப்பி நீரின் உதவியால் வளர்ச்சியடைந்த உடலின் உணர்வுகள் தூண்டுதல் அடைந்து, சலனமும் அடைந்து, ஆடி ஒடி அலைந்து திரிந்து ஒய்ந்து விடக்கூடிய நெருக்கடி நிலையின் பாதிப்பில் அவளது உணர்ச்சிகள் கன் றிச் சிவந்து கதறவும் தொடங்கி விடுகின்றன:

“...நான் கயிறு கட்டிக் கொள்ளுவது, என்னுள்ளே பொங்கி விட்ட சந்நியாசப் புயலுக்குப் பயந்துதான்!... உத்தியோகம், உறவு, ஊர் அத்தனையும் விட்டு விட்டு, தெருவோடு எங்கேயாவது நடந்து போய் விடுமோ என்கிற பயத்தை உத்தேசித்துத்தான்! இன்னும் பத்து வருஷம் கழிஞ்சு, நாப்பத்தாறு வயசானாலும் இப்படி

ஜெ-11