பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

நடந்து விடலாம். இந்த முப்பத்தாறு ஓர் இரண்டுங் கெட்டான் பருவம். செடியும் இல்லாமல், மரமும் இல்லாமல், கல்யாண முருங்கை மரம்!...தெருவோடு நடந்து போக வயசும் உடம்பும் தடை சொல்கிறது; திரட்சியான மாரும், குழையும் வயிறும், திமிறி நிற்கும் பிருஷ்டமும் இடைஞ்சலைத்தான் சேர்க்கின்றன... எனக்குத் தெரிஞ்சி, கிழத்தனத்தை வரமாகக் கேட்ட பெண் ஒளவைதான். எனக்கும் அப்படிக் கேட்க ஆசை தான்! கொடுக்கத்தான் ஆள் இல்லை :-இந்த முருங்கைப் பயணத்தைக் கடக்க வேறு வழி இல்லாமலே, கல்யாண ஏற்பாடு செய்திருக்கிறேன். தேவைகளற்று, ஒரு துணை யைத் தேடிக் கொள்கிறேன். ஆசைகள் பூர்த்தியான பிறகு, ஆதரவுக்காக ஒண்டிக் கொள்கிறேன்...எனக்குப் புருஷனாய், யார் வேண்டுமானாலும் இருக்கலாம்! இதிலே சிரமம் ஏதும் இல்லை! இவர் எனக்கு வாய்த் திருப்பது பற்றி மகிழ்ச்சியோ, துக்கமோ இல்லை. இவருக்கு ஏதாவது தேவைப்படலாம், முடிந்தவரை என்னாலும் கொடுக்க முடியும்; முடியாதபோது, ‘இல்லையென்று குழந்தையாய்க் கை விரிக்கவும் முடியும். இப்படி நிதானமாய், வெட்க விசாரணைகளின்றி, குறு குறுப்பின்றிக் கல்யாணம் பண்ணிக் கொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது!...

நூதனமானதொரு சமுதாயப் பார்வை சித்திக்கப் பெற்ற பால குமாரன் என்னும் நல்ல கதாசிரியர் படைத்த ‘கல்யாணமுருங்கை கதையில் எல்லாமே இருக்கின்றன வென்று நான் சற்று முன் சொன்னேன் அல்லவா?-என் சொல்லுக்கு முத்திரையும் முத்தாய்ப்பும் இட்டுச் சாட்சி சொல்வதற்குத் தயாராகும் விஜயலக்டிமி என்கிற விஜி, சுயச் சோதனையின் முறை வழியில் விளைந்த சுய தரிசனத்தின் வழி முறையில், முறைகேடான தன்னுடைய கதையை முறையாகவே நமக்கு தெளிவு படுத்திக் காண் பித்துவிடுகிறாள். அவளுடைய மனத்தை அவளது மனச் சாட்சி விழிப்புக் கொள்ளச் செய்யவே அவள் மனம்,