பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

தானே சோதனை செய்து பார்க்கவும் அதன் பலனாகத் தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தவும் தயா ராகும்போது, அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், அம்மன்னிப்பில் ஒரு புண்ணியம் கிட்டவும், ஒரு நல்ல விடியல் ஏற்படுவதும், ஏற்படுத்தப்படுவதும் தானே தருமமாக அமைய முடியும் ?

இதுவே உச்சக்கட்டம்:

குத்து விளக்குப் பூஜைக்கு உயிரும் உயிர்ப்பும் கொண்ட, உணர்வும் உறவும் பூண்ட நாயகி வேடம் புனைந்து, குத்து விளக்கின் திருச் சந்நிதானத்தில் வந்தமர்கிறாள், புனை கதையின் நாயகி விஜயலக்ஷ்மி !

புனிதமான குத்து விளக்கினின்றும் சுடர் தெறிக் கின்ற சுடர்கள் வினாடிக்கு வினாடி மாறுகின்றன; மாறி, வருகின்றன!

பார்வையின் நூதனமான கோணம் !

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் தமது இலக்கிய, வரலாறு’ நூலில், வரவேற்கத்தக்க சமுதாய மாற்றத்தை நல் வழிப்படுத்திக் காட்டிப் புரட்சி செய்த சிந்தனை மேதை வ. ரா. மூதறிஞர் ராஜாஜி, பேராசிரியர் கல்கி, அறிஞர் அண்ணா, டாக்டர் மு. வ. போன்ற சிலரை நினைவு கூர்ந்து, பின், தமிழ்ப்படைப்பிலக்கியத் துறையில் பயனுள்ள புதிய சோதனையாளர்களாக விளங்கும் அகிலன், புதுமைப் பித்தன், விந்தன், எஸ். ஏ. பி. ஜெயகாந்தன், பூவை ஆறுமுகம், கோவி. மணி சேகரன், நா. பார்த்தசாரதி, தி. ஜானகிராமன், நீல. பத்மநாபன், அனுராதாரமணன், பாலகுமாரன் முதலான பலரையும் நினைவுப்படுத்தியுள்ளார்.

(பதினைந்தாம் பதிப்பு ; 1981 இதோ மீண்டும் விஜி !