பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

“மனசு நிம்மதியா இருக்குமே ?...வெத்து நம்பிக்கை தான்; ஆனா, ரொம்ப ஆரோக்கியம்...’ தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார்.

“கல்பாவுக்குச் சாமி வந்தது.” “அப்படி என்ன சொன்னா?” “எல்லோரும் கேrமமா இருப்பாளாம்!” “ஏன், அது நல்ல வார்த்தைதானே?” “நல்ல வார்த்தைதான் - எப்படிச் சாத்தியம் ? எல்லாரும் எப்படிச் செளக்கியமா இருக்க முடியும்? இயல் புக்கு விரோதமில்லையா ? வெறும் ஆசை வார்த்தை தானே ?... சாமிக்கு ஆசை உண்டோ ? புலி செளக்கியமா இருக்க, மான் சாக வேண்டாமா ? பாம்பு உயிர் வாழ தவளை சாக வேண்டாமா ?...ச்சே... சகலமும் பொய்யாய் இருக்கு பெரிய பெரிய பொய்யா, வெட்கமில்லாம சொல் லிண்டு... பொய்யை ஏத்துண்டு...” “என்ன ஆச்சு உனக்கு, விஜி ?” “இனிமே இந்தப் பூஜையெல்லாம் வேண்டாம், ரங்கா !” -

“சரி, பூஜை வேண்டாம் ; வேறென்னென்ன வேண் டாம் ? விஸ்ட் போடு !”

‘ குழந்தை கூட வேண்டாம், ரங்கா!” “விஜி, நெஜமாத்தானா?” r “எதையெடு, குழப்பம்; எதையெடு, சந்தேகம். ச்சே. வெறுப்பா இருக்கு இவ்வளவு குழப்பமா இருக்கிற உலகத்துக்கு இன்னொரு ஜீவன் வந்து, நம்மை மாதிரியே அலைக்கழியனுமா ? நெஜமாகவே குழந்தைகள் மேலே பிரியம் இருந்தா, குழந்தை பெத்துக்கக் கூடாது, ரங்கா !”

“என்ன குழப்பம் உனக்கு, விஜி ?” “குழப்பம் இல்லை, ரங்கா; ஒரு தெளிவு!... ஒரே குடும்பம், ஒரே வித்து, ஒரே வளர்ப்பு...நாங்க சகோதரிங்க