பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

எதிர்பார்த்து ஏற்பட்ட அல்லது, எதிர்பாராமல் ஏற் படுத்திக் கொண்ட விபத்துக்களிலெல்லாம் விஜி உயிர் தப்பிவிடுகிறாள் ! ஆனாலும், அவள் அடிபடாமல் தப்பிப் பிழைக்க முடியவில்லைதான் ! அது அவள் சொந்த விஷயம், விவகாரம் !

விவகாரம் என்றால், அது முச்சந்திக்கும் நாற் சந்திக்கும் வரத்தான் செய்யும் சமூக விதியின் நிர்த் தாட்சண்யமான இயல்பு இது. ஆகவே, அவள் கற்பு விமர்சிக்கவும் படுகிறது ! ஏன், அவளே சோதிக்கப்பட்ட தன் கற்பு நிலையை விமர்சிக்கவும் துணிந்து விட வில்லையா ?

அதோ, விஜி திரும்பிப் பார்க்கிறாள் :

நீங்களும் திரும்பிப் பாருங்கள் :

பரிசோதனைச்சாலை :

Shot No : 1

இனிய சிநேகிதி (ஸ்நேகிதி என்பது தான் பால குமாரனுக்கு கைவந்த ஸ்நேகமான சொல் :)

விஜயலக்டிமியின் நினைவாகி, அவளுடைய திருமணத் திற்கென ஒரு பரிசுகொண்டு வருகிறார் அமெரிக்க நாட்டு வில்லிங்ஸ்டன். அவர் எழுதின தமிழ்ப்பாடலே பரிசுப் போருள். பாடுகிறார்.

“காற்று அசைவினிலே மரங்கள்

உன் கண்விழி போலாடும் காலைக் குளிரிலே உன் குரல்

மீண்டும் தாலாட்டும். பச்சை வயல் மனது எல்லாம் நீ