பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 177

பாதம் பதித்த இடம். இயற்கை வளர்த்தவளே, என்னுள் இச்சை அறுத்தவளே !...”

வில்லிங்ஸ்டன் பாடி முடித்துக் கைகூப்புகிறார்.

விஜி பரிசு தாளாமல் தள்ளாடுகிறாள். கீழ் உத(ட்)டை அழுத்திக் கடித்துக் கொள்ளுகிறாள். கண்ணில் நீர் பொங்குகிறது. அவளுக்கு வலது புறத்தில் உட்கார்த். திருந்த ரங்காவின் கையை இறுகப்பற்றிக் கொள்கிறாள்.

அவள் அலமந்து போனது ரங்காவுக்குப்புரிந்து போகிறது “யேசு மாதிரி இருக்கான் வி.ஜி. யூத முகம் இவனுக்கு !”

விஜி என்கிற பெண் மனத்திற்குள் மகதலேனாவின் குணம் தோன்றுகிறது அவன் காலில் வாசனைத் தைலம் தடவிச் சரிய வேண்டும் போலிருந்தது. அவிழ்த்துப் போட்டுப் படுத்துக் கொள்வதை விட, மனசுக்குப்பிடித்த ஆணின் பாதங்களை பிடித்து விடுவதே சுகம் என்பது மகதலேனாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும் மாறாத காதலை, மரியாதையை இதைவிட எப்படி வெளிப்படுத்த முடியும் :-அவள் மெல்ல நகர்கிறாள், வில்லிங்ஸ்டன் மடியில் தலையைப் பதித்துக் கொள்கிறாள், வி.ஜி.

விலிங்க்ஸ்டன் அவளுடைய தலையை தடவிக்கொடுக் கிறார். “சந்தோஷமாய் இரு, வி.ஜி.சந்தோஷமாய் இரு. மெல்ல விஜியை விலக்குகிறார். கை கூப்புகிறார். சிரிக்கிறார், படி இறங்கிச் சத்தம் எழாமல் விடை பெறுகிறார். - - - . . .

விஜி ; ‘மதுவின் போதையோடு, நாலு ஆண்களுடன் கூடிய அயர்ச்சி நிறைவு - அம்மா, இது போதும்.