பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10 ஒரு சிங்கம் முயல் ஆகிறது

சிவசிங்கரி

சிவசங்கரி ; ஏன் ?

என்னுடைய அன்பிற்குகந்த எழுத்துச் சகோதரி சிவசங்கரியை எனக்குப் பிடித்திருந்த காலம் ஒன்று இருக்கத்தான் இருந்தது- ! அப்பொழுது நான் தமிழ் மண்ணை மறந்தும் துறந்தும், கேரளத்தின் அழகான மண்ணிலே கால் பதித்திருந்த ஆனந்தமான சமயம் அது. அப்போதுதான், நான் சிவசங்கரி'யை ஆதியோடந்த மாக, இனம் கண்டேன். சகோதரி என் இனம் அல்லவா? சிவசங்கரியை இனம் காண உதவியது என்ன், தெரியுமா ! ஏன் ?- ஆமாம் ; ஏன் ?’ என்னும் கேள்விக்குறி !கேள்விக் குறிப்பில், ஆச்சரியக் குறிப்பை உணர்த்தினாள், “ஏன் ? நாயகி ப்ரியா - அப்பா ரகுவின் கழுத்தில் அன்பு மாலையாகி, கன்னத்தோடு கன்னம் வைக்கும் ப்ரியா அவள் !

ப்ரியாவில் நான் சிவசங்கரியைத் தரிசித்தேன். உயர் வான ஒர் எண்ணம் அப்போது சகோதரியின் பால் எனக்கு ஏற்பட்டதில் வியீப்பிற்கு இடம் இல்லைதான். ஏனென்றால், நல்ல எழுத்துக்களென்றால், தேடிப் பிடித்து, ஏன் ஒடிப் பிடித்துங்கூட, உமா இதழில் வெளி விட்டுப் பழகியவன் நான். மேலும், ஞானபீடப்பரிசிலைப்