பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 199



சிவசங்கரியின் குழந்தைப் பிரச்னை

இனி, சிவசங்கரியின் குழந்தைப் பிரச்னைதான் மிச்சம் : -

சிங்கம்-முயல் கதையைச் சொல்லட்டுமா ? லாவண்யா பணக்காரி ; லிப்ஸ்டிக் சார்லி செண்ட்’ என்று ஒப்பனைப் பொருட்களை ஒய்யாரமாகத் துணைக்குச் சேர்த்துக் கொள் பவள் சாமான்யமானவளாக இருக்கமுடியுமா?அவளுக்கு ராம் என்றொரு கணவன் ; ஒரே யொரு கணவன் தான் ; அவனும் பணக்காரன் தான். ஆனால், அவனால், அவளுக்கு அவள் ஆசைப்பட்ட மாதிரி குழந்தை ஒன்றைக் கொடுக்க இயலவில்லை!-அதாவது. லாவண்யா வுக்கு அவளது கணவனான ராம் மூலம் குழந்தை யைப் பெறக்கூட பாக்கியம் இல்லை :ஆனாலும், அவளுக்கு எப்படியும் ஒரு பாப்பா வேண்டும் !-அவளுடைய ஆசையை நிறை வேற்ற தாமு கிடைக்கிறான் : இப்பணியை நிறைவேற்றிக் கொடுக்க அவனுக்கு மேனகா என்ற தமிழ் வேசி ஒருத்தி, அழகுச் சிலை கிடைக் கிறாள். லாவண்யாவின் மூளை வெகு சுறுசுறுப் பானது இயங்குகிறது, இயக்கவும் செய்கிறது. இப்போது, டெஸ்ட் ட்யூப் பேபி” சிக்கலாக அமையவில்லை. ஆர்டிஃபிஷியல் இன்ஸ்ெ tGabroof (” (Artificial insemination) #Tr! பிரச்சினை - அதாவது, கணவனின் விந்து மேனகாவுக்கு ஊசி மருந்தாகச் செலுத்தப்பட்டு, அதன் விளைவாக, அவள் கருத்தரித்து, தன் கணவன் ராமின் குழந்தையைப் பெற்றுத் தனக்குக் கொடுத்து விட்டு, அப்போதே பிரிந்து விடுவாள் மேனகா என்பது, லாவண்யாவின் அதீதமான செயல் ஏற்பாடாகவும் அமைகிறது; அவள் கனவும் அதுவேதான் !