பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 19




அந்நியக் கன்னி ஒருத்தியையும் ஸ்பாயில் செய்து, ‘கெடுத்து’ விடலாமோ ?

சும்மா சொல்லக்கூடாது: பிரபு என்றால், பிரபுதான்.

பிரபு யார் ?

அசல் ஆண்பிள்ளை. சாண் பிள்ளையானாலும், ஆண்பிள்ளை ரகம்.

உயர் மட்டம்.

உயரம்...

ஒரு வேளை, கங்காவுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.

பிரபுவை இந்தக் கங்கா எப்படி இனம் கண்டாள்?காலங்கடந்து, பன்னிரண்டு ஆண்டுகளையும் கடந்து, ஆனால், உயிரை மட்டும் கடக்க மாட்டாமல், இல்லை, இல்லை, கடக்க ஒப்பாமல், இந்தப் பிரபுவை அந்தக் கங்கா அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருக்கிற தென்றால், அது ஒர் அதிசயம் தான் :- அவளே சொல் கிறாள்: “அவன் (பிரபு) கண் பாம்பு மாதிரியோ, மயில் மாதிரியோ, பக்க வாட்டிலே இருந்து பாக்கறச்சே அன்னிக்கு, அந்த இருட்டிலே மங்கின வெளிச்சத்திலே தெரிஞ்சுதே, அது அப்படியே இப்ப என் மனசிலே தெரியறது !...” - பிரபுவின் கம்பெனி சம்பந்தப்பட்ட ஆண்டு மலர் ஒன்றில் அவனுடைய பெயர், படம் எல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருந்ததைக் கங்கா காண நேர்ந்த வரையில், அவள் கெட்டிக்காரி. ‘இந்தப் பேரைப் படிச்சோ, இந்தப் படத்தைப் பார்த்தோ நான் இவனைக் கண்டு பிடிச்சுடலே ; இது, அவன்தான்னு தெரிஞ்ச பிறகு, அந்தக் கண்ணுலே அந்தச் சர்ப்பம் தெரியறதே !...” கங்கைப் பிரவாகமாகக் கங்காவின் நெஞ்சம் பொங்குகிறது !... * -