பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 43


சந்தைப் பணம் போலே நாணயமில்லாமல் மந்தமாக ஒலிக்கவே செய்கிறது !- இப்படிச் சமூக வாழ்வில் அவலங்களை உற்பத்தி செய்யக் கூடிய முரண்களை எந்த அறிஞனும் அனுமதிக்கமாட்டான் :- நாவலாசிரியர் சரிந்து, கங்காலின் மேலேயே உருண்டு விழவும் நேர்கிறது !

மேலும், இத்தகைய சூழலின் சுழல் காரணமாகத்தானே லாயர் மாமாகூட கங்காவைப் பார்த்து, “நீ யாருக்காவது வைப்பாட்டியா இருக்கலாம் ; ஆனா, எவனுக்கும் பெண்டாட்டியா இருக்க முடியாது. அப்படியே நீ ஒதுங்கிண்டுட்டா, நீ கெட்டாலும், நம்ப தர்மங்களையும் சாஸ்திரங்களையும் கொடுக்காத புண்ணியம் உனக்கு வரும்.” என்று மிகவும் பச்சையாகவே அவள் பேரில் குற்றப் பத்திரிகை வாசிக்கவும் துணிந்தார். மற்றுமோர் உண்மை நிலையையும் ஜெயகாந்தன்பால் நாம் தரிசிக்க முடிகிறது :- அக்கினிப் பிரவேசத்தில் வெறும் ஜலத்தைக்கொண்டு கற்பு களங்கப்பட்டதீட்டைத் துடைக்கத் துணிந்ததால் ஏற்பட்ட அபவாத வினையின் உறுத்தல் அவரது இலக்கிய மனோதருமத்தைப் பெரிதும் பாதித்து விட்டிருக்க கூடும். அதற்குப் பரிகாரம்தேடி, இந்தச் சமூகத்தின் மன்னிப்பைப் பெற முயற்சி செய்தவர் கங்காவை கன்னா பின்னா வென்று நடத்தியதன் எதிர் விளைவாக, தமது முயற்சியில் மண்ணைக் கல்வவும் நேர்ந்துவிட்டது !-சாத்தான் வேதம் ஒதிய கதைதான் போலும் ! -

முரண்பாடுகள் வாழ்க்கையிலும், வாழ்க்கையைப்பிரதி பலித்துப் படம்பிடித்துக் காட்டும் இலக்கியத்திலும் ஜனநாயகப் பண்புடன் அனுமதிக்கப்படத்தான் வேண்டும். ஆனால், முரண்பாடுகள் மாத்திரமே வாழ்க்கையென நியாயப்படுத்துவதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடிவதில்லை !... -

மாமா இருக்கிறாரே, வெங்கு மாமா, அவர் பழுத்த பழம் ;பழத்தைத் தின்று விட்டுக் கொட்டையை