பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

சொல்றதே, இந்த என் வீக்னஸ்லே நீ அட்வாண்டேஜ் எடுத்துக்கோ !’ங்கிறதுக்குத் தானே?...’

தாயே !-எனக்குத் தெரியும் !-பிரபுவை இந்த ஜன்மத்தில் உன்னால் மறக்கவே முடியாது மறக்கவும் வேண்டாம், தாயே !... ‘தொட்ட’குறை, ‘விட்ட’ குறை என்பது கூட ஒரு பிராப்தம் இல்லையா, என்ன ?

நிலை உச்சம், இதோ :

வாழ்க்கை முடியும் போது உச்சக்கட்டம் எதுவும் பொதுவாக நிகழ்வதில்லை. .

ஆனால், கதை முடிகிறபோது, உச்சக்கட்டம் என்ற ஒன்று கட்டாயமாக உருவாக வேண்டும் ; அல்லது, உருவாக்கப்பட வேண்டும்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உச்சக்கட்டம் இதோ, தயார் ! .

அதற்குள்...

என்னென்னவோ நடந்து விட்டது! ஆமாம்; கங்கா—பிரபு சம்பந்தப்பட்ட வரையிலும் என்னவெல்லாமோ எப்படியெல்லாமோ நடந்து விட்டது!

ஒரு மழையில், ஓர் இருட்டில், ஒரு காரில், ஒரு கங்காவின் ஒரு கற்பு பறிபோயிற்று; பறிக்கப்பட்டது. தன்னை இழந்தவள், தன்னை உணர்கிறாள். இவ்விபத்து நடந்து, சரியாகவோ, தப்பாகவோ, பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்-பன்னிரண்டு ஆண்டுகளைக் கழித்தபின், என்னவோ ஒர் உந்துதலின் பேரில், பிரபுவை அதாவது, தன்னைச் சுவைத்தவனை, அதாவது, அவன் விரும்பியோ, விரும்பாமலோ அவளைப் பதம் பார்த்த அந்தப் பிரபுவை எப்படியோ இனம் கண்டு, தேடிக் கண்டு பிடித்து, தொலை பேசியிலும் அவனோடு தொடர்பு கொள்கிறாள்.