பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



“செத்துத்தான் சமூகத்தின் அனுதாபத்தைப் பெற வேண்டுமானால் அந்தப் பாழும் அனுதாபம் எனக்கு வேண்டவே வேண்டாம் !” என்று வீரம் பொழிந்த அகல்யாவை நீங்கள் ஏன் அவ்வளவு துரிதப்பட்டுக் கொன்று போட்டீர்கள் ? உங்களுக்குக் கூட அவள்பால் இரக்கம் பிறக்கவில்லையா ?” “நான் உன்னைக் காதலிக் காமல் கொல்லுவதைவிட காதலித்தே கொன்று விடலாமென்று நினைக்கிறேன்!” என்று உங்கள் கனகலிங்கத்தைப் பேச வைத்தீர்களே, அதன் நிமித்தம்தான் அவளுக்கு வாழ்விலிருந்து விடை’ கொடுத்தீர்களா ?

என் ஆழ்ந்த அனுதாபங்கள் அகல்யாவுக்கு உரியனவாகுக. ஏன் தெரியுமா ? அவள் செத்துப் போனாளே என்பதற்காகவா ?-அன்று. அவள் அருமை மிகுந்த இந்தத் தமிழ் மண்ணில் பிறந்தாளே என்பதற்காக !

“ஒரு காலத்தில் சொர்க்கத்திற்கு இருந்த மதிப்பு, காதலுக்கு இருக்கிறது. இரண்டும் க ற் ப ைன யே என்றாலும், காதலைக் கைவிட நம்மால் முடிவதில்லை !”

அமிர்தம்’ என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பிற்கு தாங்கள் அருளிய முன்னுரையின் இடையிலே தலைகாட்டும் வாசகம் இது.

காதலை எழிற் கனவுக்கு அடிக்கடி நான் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். நம் இருவருடைய காதல் விளக்கங்களும் ஏறக்குறைய ஒரே குரலில்தான் ஒலி காட்ட முடியும். சொர்க்கத்திற்கும் கனவுக்கும் நடுவில் அகப்பட்ட அகல்யா, இந்திரனிடம் அகப்பட்டு ஏமாந்து, அப்பால் கனகலிங்கத்தினிடம் அகப்பட்டு அனுதாபப் பொருளானாள்.

இந்த அனுதாபமே கதைக்கு கருப்பிண்டம் என்பது என் எண்ணம். -