பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



‘தடம் புரண்ட குறிக்கோளுடன்’ அபலை ஒருத்தி தவிப்பதைபற்றி அவனால் கவலைப்பட முடியவில்லை. அவனுக்குத் திருமணம் நடைபெறுகிறது. அவனுடைய அவளுக்குக்காக இரங்குகிறாள் அகல்யா. கனகலிங்கத்தின் உதவி ஒத்தாசைக்கும் சோதனை வந்தவுடன், குறுக்கிட்டு நின்ற பழைய தசரத குமாரன் அவளுக்கு அடைக்கலம் தருவதாகக் கையடித்துச் சொல்கிறான். கடைசியில், சமையற்காரன் ஒருவன் பாலையும் பாவையையும் ஒன்றாக்கி உவமை பேசப் போக, அவள் அக்கணமே கைவிடப்பட்டு, கடலிடைச் சங்கமம் ஆகின்றாள். இது தான் கதை ! அல்லவா ?

உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன் ! அகல்யா கனகலிங்கம் ஆகிய இவ்விருவரில் உங்கள் மனத்தை நிறைக்கும் உருவம் யாருடையது ? என்ன, யோசிக்கிறீர்களோ ? இவ்விருவரையும் மேலே அனுப்பி விட்டதன் மூலம், உங்களுடைய அனுதாபத்துக்கு இவர்கள் இருவருமே இலக்காகவில்லையென்று ஏன் கருதமுடியாது? நான் அப்படித்தான் கருதுகிறேன்.

மனித மனம் சலனம் நிறைந்தது— சபலம் நிரம்பியது. காதல் என்னும் போர்வை மூலமாகத் திரிந்த அகல்யாவுக்குக் காமமே மிஞ்சியிருக்க வேண்டும். கெட்டவள் என்று தெரிந்தும், தன் இடத்தில் தங்கப் புகலளித்து, பிறகு, நெஞ்சிலும் இடம் கொடுக்க எண்ணியிருந்த கனக லிங்கத்தின் எதிர்பாராத மரணத்தின் சூழ்ச்சியைப் பற்றி ஏற்கெனவே ஊகித்ததாக எண்ணும் அவள் முன் கூட்டியே அந்த விபத்தைத் தடுத்திருக்கக் கூடுமே ? “நான் அப்பொழுதே நினைத்தேன், நீங்கள் தான் அந்தக் கொலை காரனை அனுப்பியிருப்பீர்களென்று! நீங்கள் நாச மாய்ப் போக!” என்று நாகரிகமான சாபம் கொடுத்ததுடன் அவள் கனகலிங்கத்தின் உயிரின் மீதும் உள்ளத்தின் மேலும் வைத்த காதலின் கதை சுபம் பெற்று விடுகிறதா? இதயம் பெற்றிருந்தவனை இழந்த கோலம் மாறுவதற்