பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ‘அழியாக் கனவு’களைக் கண்டு கொண்டிருப்பது தான் அன்றாட அலுவல். அந்த அலுவலுக்கு உயிரூட்டுகிறது சீதாராமன் சிதாராமன் என்ற இளைஞனின் வருகை. நனினியை இரண்டு முறை பார்த்து, அதன் விளைவாக அவனுக்கு விளைந்த துன்பங்கள் அதிகம். அதனால்தானோ, என்னவோ, அவளை அவன் தன் உரிமையாக்கிக் கொள்கிறான். ஆனால், அவளுக்கோ அவனது வாழ்வில் புதைந்து கிடந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு மிஞ்சுகிறது. உள்ளத்தின் தற்காப்பு உணர்ச்சி (Self preservative instinct) இது. அவனால் அன்பு சொட்ட அழைக்கப்பட்ட ‘பட்டணத்து மாமா’வான சீதாராமன், “அந்தப் பழைய கதையை எல்லாம் நீயும் நானும் மறந்து விடுவதே நல்லது!” என்று முத்தாய்ப்பு வைக்கின்றான். இறுதியில் அவளது கடிதம் அவளுடைய அழியாக் கனவுகளுக்கு முத்தாய்ப்பு அமைத்து விடுகிறது. எவ்வளவு சாமர்த்தியசாலிதான் ஆனாலும், ஓர் அயோக்கியனுடன் வாழ விரும்பவில்லை. திடீரென்று ஏற்பட்ட முடிவல்ல இது.

‘என்னைத் தேட வேண்டாம்’ என்று எழுதி, பின் குறிப்பு ஒன்றையும் இணைத்திருந்தாள்! அவள் தன் பிறந்தகத்துக்குச் செல்லவில்லையாம்!

ஒரு சிறு விஷயம்

‘நளினி’ என்னும் மகுடம் ஏந்திக் கொண்டிருக்கும் இக் கதையை ‘நாவல்’ எனப் புெருமையுடன் தேர்ந்தெடுக்கின்றார், நளினியைப் படைத்தவர். இந்தப் படைப்பாளரை முதலில் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர் நம் மதிப்புக்குரியவர். பெயர் க. நா. சுப்ரமணியம். பெரும்பாலோர் சொல்கிறார்கள்; “க. நா.சு. பெரிய இலக்கிய விமரிசகர்!” சிலருக்கு அவர் என்றால், சிம்மசொப்பனம். அப்படிப்பட்ட பயங்கர மனிதர் தாம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு (1947) முன்னர் ஆக்கியம்