பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



பார்த்தேன்.நன்னாத்தான் இருந்தார்!’ என்று பரிந்து பேசுவதைப் பார்க்கையில், அவன் ஆணழகனாகத்தான் இருக்க வேண்டும். அவன்- அவர் சீதாராமன். ஆனால், இந்த சீதாராமன் செய்த படுத்தடிக் காரியம்’ என்ன முடிவு கண்டது ? பட்டணத்து வங்கி ஒன்றிலே களவு போன இருபதினாயிரம் ரூபாயின் ‘தலைவிதி’ என்ன ? மேற்படி பணத்தைக் கையாடினவர் குருஸ்வாமி என்ற ‘உண்மை’ நம்மை எட்டிப் பிடிக்கத் தவறவில்லை. ஆனால், சீதா ராமனின் நேர்மையும் நாணயமும் கண்ட தீர்ப்பு என்ன ஆயிற்று ? பிராயச்சித்தமே இல்லாத ஒரு குற்றத்தைச் செய்து விட்டவன் போல அவன் தலை இறங்கியதற்குக் காரணம் என்ன ? ‘ஒரு கத்தை நோட்டுக்கள்’ அவனுக்குக் கிடைத்தனவே, எப்படி ? மறுமொழிகளை நாம்தாம் ஊகம் செய்து கொள்ள வேண்டுமாம் !...

நளினியின் ‘குழந்தையுள்ள'த்தில் சீதாராமனைப் பற்றிய வரையில் இரண்டே இரண்டு காட்சிகள் தாம் நின்றன. ஒன்று, சீதாராமன் விஜயபுரம் வந்தபோது, அவனைப் போலீசார் கைது செய்து அழைத்துப்போனது : இரண்டாவது, குருஸ்வாமியும் அவனும் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விவாதம் செய்தது.

சரி; இப்படிப்பட்ட இரண்டு காட்சிகளும் அவளுடைய மனத்தைச் சலனப்படுத்தியிருந்தால், அவனைப் பற்றி அவள் ஒரு புதுப்பாடத்தைப் படித்துக் கொண்டிருக்க மாட்டாளா ? காலங்கடந்து அவள் படித்துக் கொண்டதால் தானே, அவளது ‘இறுதிக் கடிதம்’ உருவானது ? ‘குழந்தை உள்ளம்’ என்று சப்பைகட்டுக்கட்டிநளினியை நட்டாற்றில் அகப்படச் செய்திருக்கும் இவர் சீதாராமனைப்பற்றிய வரையில் நளினிக்கு ஒருமனோதிடமும் சிந்திப்பதற்கான ஒரு முதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது வாஸ்தவமே என்று வேறு வக்காலத்து வாங்கிக் கொண்டு தத்தளிக்கிறார். பாவம் தன் வாழ்க்கைப். பிரச்சனையின் புயல், பகுதியைப் போக்கிக்கொள்ள