பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 85

ஒர் அழகான கிளிக்குப் பெயர்தான், காயத்ரி’ என்பது ! -

வளர்க்கப்பட்ட அந்தக் கிளி ஒப்படைக்கப்பட்டஒப்புவிக்கப்பட்ட பூனைக்கும் பெயர் இருந்தது ; அது தான், ரத்னா என்கிற ராஜரத்னம் ! நயவஞ்சனையையும் நம்பிக்கைத் துரோகத்தையும் சிலந்தி வலையெனப் பின்னி, அதற்குள் காயத்ரி, ஒரு ரோஜாப் பூவைத் தள்ளி, இருட்டில் அல்லாமல், வெளிச்சத்திலேயே அவளைகட்டின் பெண்டாட்டியான அவளைச் சூழ்ச்சி செய்து மயக்கி ஒரு ‘பிஸினஸ் நடத்தும் போலி மனிதன்மோசடி ஆள்-மோசமான பேர்வழிதான் (Pious fraud) அவன். கொண்டவளுக்கு. அதாவது, கட்டிக் கொண்டவளுக்கு, அதாகப்பட்டது, தாலியைக் கட்டித் தன்னுடைய சொத்தாக ஆக்கிக் கொண்டவளுக்குக் கண் கட்டு மாயமாகத் துரோகங்கள் இழைத்து, அவளைக் கண்களைக் கட்டி வெட்ட வெளிக் காட்டிலே, வெட்ட வெளிச்சக் காட்டிலே தள்ளி விட்ட மாதிரி, அவளது அழகான கண்களைக் கட்டாமலே அவளுக்கும் அவளு டைய புனிதத்துக்கும் சகட்டு மேனியாகத் துரோகங்களை இழைத்து, அவளைப் பிறந்த மேனியில் தட்டித்தடுமாறித் தவித்து, உருகி உருக்குலையச் செய்த அசல் பாவி, பாவியிலும் பாவி, மாபாவி அவன் - - சமுதாயத்தின் அழகான அங்கமான காயத்ரி ராஜ ரத்னம், அதே சமுதாயத்தின் நச்சு நோய்க் கூண்டுப் புழுவான ராஜரத்தினம் காயத்ரியிடமிருந்து இறுதி விடுதலை பெறுகிறாள். -

வழக்குரைஞர் கணேஷ் , “காயத்ரி உன்னை அவர் கள் (ரத்னா என்கிற ராஜரத்னம்+சரஸு என்கிற சரஸ்வதி-- இந்திராபேபி” +ஐயர் கூட்டம்-கூட்டணி) எப்படி உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள், தெரியுமோ ?” - --- -

காயத்ரி : “எப்படி ?”

ஜெ-6