பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 91

இங்கே, சுஜாதா என்றால், பளிச்சென்று ஒருத்தி பளிச்சிட்டு மின்னுகிறாளா ?-ஊஹல்ம்-மூச்! மேலை நாட்டு நாகரிக மங்கைகளெல்லாம், ரேவதி, பவானி, காயத்ரி, கிருஷ்ணவேணி, கணேஷ், வசந்த், சரசு அது இது என்று மாற்றுத் தமிழ்வேடம் புனைந்து காபரே ! நடனம் ஆடுவார்கள் :- அவ்வளவுதான் கண்ட பலன் :ஆதலால்தான், காயத்ரி மாதிரியே, ஏனைய நவீனங்களின், சதை அரசிகளும் ரேஷன் அரிசியாக உப்புச் சப்பு இல்லா மலும், இருந்த இடம் தெரியாமலும் போய் விட்டார்கள், பாவம் !

கதை என்றால், கரு, பின்னல், போராட்டம், மன வோட்டம், குணச்சித்திரம், நீதி என்று பற்பல விதிகள் உண்டு !

ஆனால், தமிழ்ச் சமூகத்தின் துரோகிகளாகவும் எழுத்துச் சமுதாயப் புல்லுருவிகளாகவும் பட்டாம் பூச்சிகளாக மின்னிக் கொண்டிருக்கிற நாலு பேர்களில் என்னதான் சுஜாதா முதல் இடத்தைப் பற்றிக் கொண் டாலும், புஷ்பா தங்க(த்)துரை, இந்துமதி, சிவசங்கரி ஆகியவர்களுக்கு அவர்களது ஆபாச இலக்கியச் சேவகத் துக்கு அளிக்கப்படுகிற மிகமிகக் கடைசியான இடத்தையே தான் இந்த ரங்கராஜனுக்கும் வழங்க முடியும் !