பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஒரு (ஓர் ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது !

புஷ்ப தங்க(த்)துரை

பாவப் பரிசோதனையிலே நால்வர் !

பேசுகின்ற வரலாற்றில் பேசப்படும் பெருமையை நிலைத்து நிலை பெறச் செய்து வரும் தமிழச் சமுதாயம். மரபு வழிப்பண்பாட்டில் வரலாறு படைத்துள்ளது அல்லவா ?-அவ்வாறு படைக்கப்பட்டுள்ள வரலாற்றில், தமிழச் சாதியைப் பிரதிபலிக்கும் படைப்பு இலக்கியத்தின் நெறிமுறை சார்ந்த மேம்பாடு ஒர் அங்கமாகவும் அணி யாகவும் விளங்கும் அல்லவா ? : -

ஆனால், சீர்மையும், சிறப்பும் பெற்ற பொதுமக்கள் இலக்கியம் கொஞ்ச காலமாகக் கெட்டு விட்டது : கெடுக்கப்பட்டு விட்டது,

பாவம் செய்தவர்கள் நாலு பேர்.

பாவப்பட்ட ஜன்மங்களோ ஆயிரக்கணக்கில், பதினாயிரக் கணக்கில் !

விதியின் சோதனையைப் போலவே, இந்தப் பாவப் பரிசோதனையும் நிகழ்ந்தது; நிகழ்ந்தும் வருகிறது !