பக்கம்:ஜெயரங்கன்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 261

பின்பற்றி வந்த துப்பறிபவரை ஏமாற்ற உத்தேசித்து நான் வெளி வந்து செல்வத்தைக் கூப்பிடுவதுபோலும் அவள் வாது தாமதிப் பது போலும் அபினயித்து மீண்டும் கதவு வரை நான் போய்க் கூப் பிட்டது போல் கூப்பிட்டு செல்வம் பேசிக் கொண்டே வர - டன் லாஜரெஸ் என் போல் ஆடை தரித்த மோட்டார் வண்டியேறி செல்வத்தை அழைத்துக் கொண்டு போவதைப் பார்த்த துப்ப திவர் சென்றவுடன், நான் ஆகாய விமானம் ஏறி திருவிராஜ பட்டணம் சென்றேன். அங்கு அதற்கென கட்டியிருக்கும் மதில் சுவர்களு டன் கூடிய மைதானத்தில் ஆகாய விமானத்தை விட்டு, கந்தனை அழைத்துக் கொண்டு இரகசிய வழியின் வழியாய் நான் வந்த விஷ பம் தெரியும்படி மணியடித்து என் தகப்பனுரை எச்சரித்துவிட்டு அவர் அங்கிருப்பதாக மணியடித்துத் தெரிவிக்க நான் தாராளமாய் சென்றேன். அப்போது தாங்கள் வந்ததும் வந்த பின் செல்வத் தை அடைத்திருக்குமிடம் காட்டச் சொல்லிக் கேட்டதும் சில கிய ந்தனைகளுடன் அவர்கள் தங்களை அழைத்துப் போய் காட்ட தாங்கள் செல்லத்திடம் பேசிவிட்டுத் திரும்பிய பின் நீங்களி ருவரும் படுத்துக்கொண்ட பின் செல்லம் எவ்வாகுே மாய மாய் மறைந்து விட்டா ளென்றும் தெரிவித்துவிட்டு என்ன ஜோலியாய் நான் வந்தேனென்று கேட்டார். நான் முதலில் அவரி டம் உண்மை சொல்லாமல் வீண் விாையப்படுத்தி விட்டதாகச் சொல்லி மீண்டும் ரூபாய்கள் கொடுக்கிரு.ா இல்லையாயெனப்பார்த்த பின்னர்தான் நான் பழைய பிடிவாதக்காா சுந்தர ராஜூ அல்லவெ ன்றும், வியாபாரத்தில் தேர்ச்சி பெற்று அமோகப் பொருள் சம்பா தித்த திடமான வியாபாரியென அவருக்கு ரூபிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவர் கொடுத்த லட்ச ரூபாய்களை வீண் வினாயப் படுத்தி விட்டதாகவும் மீண்டும். எப்படியாவது லட்ச ரூபாய்கள் எனக்கு உடனே கொடுத்துத்திரவேண்டும் என்றும் முறண்டினேன். t திடீரென்று வந்து லட்ச ரூபாய்கள் கேட்பாயென்று தயாராய் வைத்தா இருக்கிறேன் உன் கையில் தூக்கிக் கொடுத்துப் போகச் சொல்ல” என்று சொல்லிவிட்டு கந்தனைப் பார்த்து : யோ வது புத்தி சொல்லக்கூடாதா” என்றார், அவன் ஒன்றும் பேசாமல் மெதுவாகச் சென்ற விட்டான். அப்போது தான் அடிக்கடி அங்கு வருவது அபாயகரமாய் முடியுமென்றும் தள்ளாத காலத் தில் அவரைக் க்ஷ்டத்திற்குள்ளாக்குவது சரியல்லவென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/266&oldid=633137" இலிருந்து மீள்விக்கப்பட்டது