பக்கம்:ஜெயரங்கன்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

தள்ளி சாகதியத்தின் பேரில் உண்மையாய் ஏற்படுகிறபடி அவரைக் குற்றவாளியல்லவென்று விடுதலை செய்வதைத் தவிர வேறு மார்க் கம் தங்களுக்குக் கிடைக்காது. இந்த உதவி கான் தங்களைக் கேட் கப் போகிறேன். தாங்கள் கொடுத்த்ே தீரவேண்டும்.

என்றார். இதற்குள்ளாக ரெயில் புறப்படும் முதல் மணி யடித்து விட்டது. கான் வண்டிக்குப் போகும் கோம் ஆகிவிட்டது. எல்லா விஷயங்களிலும் தங்கள் மனதிற்குத் திருப்தியாகும்படி இன் லும் இரண்டு தினங்களில் செய்யக்கூடுமென நம்புகிறேன். தயவு செய்து காளை இரவு திருவிாராஜபட்டணம் வாருங்கள்; எல்லாம் ஈஸ்வாாக்கினையின்படி நேர்மையாய் கடந்து விடும்” என்று சொல் அலும் போதே இரண்டாவது மணியும் அடித் தி ரெயில் புறப்படவே கோவிந்தன் ஒடி ரெயிலேறிச் சென்றார். சற்று நேரம் டெப்டி மாஜிஸ்டிரேட் சூத்திரப் பாவைபோல் அசைவற்று கின்று அப்பால் திகைத்த முகத்துடன் தன் இல்லம் சென்றார். கோவித்தன் தனது சாமான்கள் வைத்திருந்த வண்டியில் ஏறியதும் ஸ்னை அறைக்குத் தன் பெட்டியுடன் சென்று கால் மணி நேரத்தில் வேறு விதமான திருநெல்வேலி ஜில்லா வாசியின் ரூபத்துடன் தனது ஆசனத்தில் அமர்ந்தார். அதனல் தான் ஒட்டலி காடி திருவிராஜ பட்டணத் தில் தேடியும் கண்டு கொள்ளக்கூடவில்லை. அவர் கடைசியாக திருவீரராஜபட்டணம் ஸ்டேஷனிலிருந்து வெளி வரும்போதே ஒட்டலி காடியைக் கொளம்பு துப்பறிவோர் இருவர் பின் பற்றிச் செல்வதையும், கொளம்புத் தலைமைத் துப்பறிபவன் மாறுரூபத்து டன் ரோட்டில் கின்று தன்னைக் கவனித்துப் பின்பற்றி வர உத்தே சித்து ஜலபாதைக்கு உட்கார்ந்ததைப்போல் அபினயிப்பதையும் கண்டவுடனே, தன் மேல் சந்தேகம் கொள்ளாம லிருப்பதற்காகவே தைர்யமாய் அவரிடம் சென்று மாற்று குரலில் அவரை நெருப்புக் குச்சி கேட்டுவிட்டு காளி கோவிலுக்கு வழி கேட்டார். அப்படி யும் தன் மேல் சற்று சந்தேகம் கொண்டு காளி கோவிலுக்கு வாவும் அங்கு சற்று கோம் இருந்து கலேமைத் துப்பறிபவன் சென்ற பின் காமாகதிராவ் வீட்டிற்குச் சென்று அவரிடமிருந்து கொண்டப்ப ரெட்டி வீட்டுக்கு சாமி ரெட்டி வந்திருக்கும் விஷயம் தெரிந்த உடனே இன்றைய இரவும் மறு நாளும் அவர்களிருவரில் ஒருவரை யாவது விடாது பின் பற்றிப் பார்க்க வேண்டுமென்றும் அனேகமாய் 2 தினங்களில் உண்மை வெளிப்படுமென்றும் சொல்லி அவசரமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/313&oldid=633189" இலிருந்து மீள்விக்கப்பட்டது