பக்கம்:ஜெயரங்கன்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 323

போது சாமிரெட்டி ‘உங்களைக் கொன்று இம்மணவில் புதைத்தபின் நீங்கள் எழுந்து வந்து எங்களையும், எங்கள் குடும்பத்தையும், எங் கள் ஊாையும் நாசப்படுத்தும் அக்த நாள் வரும்போது பார்த்துக் கொள்ளுவோம்” வெள்ளையத் தேவரே! அந்தத் துரையைக் கொண் டுவந்து நமது முன்பு விசாரணைக்கு நிறுத்துங்கன்;” என்றார். அவ ாைக் கொண்டு வந்து கிறுத்தியதும், .

காந்திமதியா பிள்ளை.-இவ்வளவு கலகங்கள் கடந்ததற்கும், எனது சின்ன எஜமான் பரதேசம் போகும்படி நேரிட்டதற்கும், விாாசாமி ரெட்டி ஜெயில் சேர்ந்ததற்கும் தாங்களே காணஸ்தர், அந்த சீதாராம சாஸ்திரிக்கு சிபார்சாக வந்து சட்ட விரோதமாய் நீர் வாாண்ட் பிறப்பித்ததிலிருந்து தானே கலகம் ஆரம்பமாயிற்றர் அப்போதும் நீர் வாண்ட் பிறப்பித்த இரவே உமது சவாரி செய் யும் குதிாை, பால் மாடுகள், உமது பெண்ஜாதியின் பன்றிகள், கோழிகள் முதலியவை எங்கு கொண்டு போய் வைக்கப்பட்டிருக்தன. மீண்டும் எவ்வாறு திருப்பப்பட்டன என்று இந்த கிமிஷம் வரையில் உம்மாலாவது, உமது டெப்டி மாஜிஸ்டிாேட்டாலாவது, சற்று கேரத்திற்குமுன் டெப்டிமாஜிஸ்டி ாேட்டவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எங்கும் செல்லக்கூடிய நீளமான கைகளிருப்ப தாகக் கற்புகழ்ச்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கத்தாாாலாவது கண் டுபிடிக்கப்பட்டதா? சொல்லுங்கள் பார்ப்போம். இனிமேல் இன்று விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் ஆறுபேரும் மீண்டும் சூரியவெளிச்சத்தைப் பார்க்கப் போவதில்லை பாகையால் உங்களி டம் தெரிவிப்பதில் எவ்வித கெடுதலும் ஏற்படாது. ஆகையால் தெரிவிக்கிறேன் கேளும். உமது பங்களாவிலிருந்து ஆற்றுக் கண் ணிர் வரையில் குதிாை, பசுக்கள், பன்றிகள், முதலியவற்றின் கால டிகள் தென்பட்டன; அப்பால் பூமியே விழுங்கி விட்டதுபோல் தோன்றிற்று. ஏன்? உண்மையில் அங்கிருந்து பூமிதான் விழுங்கி விட்டது. ஆற்றின் மத்தியில் கட்டப்பட்டிருக்கும் மண்டபத்தின் மத்தியில் ஆறு அடி சதுரமுடைய ஒருகல் இருக்கிறது. அக்கல்வி விருக்கும் குசுமத்தால் அக்கல்லைக் கஷ்டமில்லாமல் அப்புறப்படு க்க முடியும் அவ்வாறு அப்புறப்படுத்திவிட்டால் பூமிக்குள் அமைத்திருக்கும் திருட்டு மாடுகளை மறைத்து வைக்கும் கல் மண் டபம் ஒன்றுக்குக் கொண்டுபோகும் வழிதென்படும். அவ்வழி பால் இவைகளையெல்லசம் இறக்கிய உடனே வழக்கம்போல் கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/328&oldid=633205" இலிருந்து மீள்விக்கப்பட்டது