பக்கம்:ஜெயில்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் வேண்டியவையோ உலகளவு இருக்கின்றன. இவைகளைச் சிக்கிக்கும் பொழுது, ஜெயிலைச் சீர்திருத்தவே முடியாதோ என்ற அவநம்பிக்கை ஏற்படுகிறது. பல நா ட் டு மக்களையும், சமூக அமைப்பையும் பற்றி வாழ்நாள் முழுதும் ஆதரவோடு ஆராய்ச்சி செய்து வந்த ரஷ்ய ஞானியான கிரபாட்கின் பிரபு, ஜெயிலைச் சீர்திருத்துவ தற்கு ஒரே வழிதான் உண்டு ; அது ஜெயிலேயே தகர்த் தெறிவதுதான் ' என்று சொல்லியிருக்கிருர். அவருக்குப் பல பெருமைகள் இருந்ததோடு, பல ஜெயில்களில் தாமே கைதியாயிருந்த பெருமையும் உண்டு. கருளுமூர்த்தி யான இந்த மேதாவியின் வாக்கியத்தைக் கேட்போர் உலகில் சிலர்தான்; அதைப் பற்றிச் சிந்திப்பவர்களையோ காணவே முடியவில்லை. ஜெயிலைச் சீர்திருத்துவதைப் பற்றிய ஆராய்ச்சிகள் சில நம் நாட்டிலும் வெளிவருகின்றன. இவை பெரும் பாலும் ஜெயில் அதிகாரிகளாக இருந்தவர்கள் எழுதியவை. ஜெயில் இன்ஸ்பெக்டர் - ஜெனரலாக இருந்த பார்க்கர் என்பவர் அநேகம் நல்ல யோசனைகள் எழுதியிருக்கிரு.ர். அவைகளில் ஒன்று, கைதிகள் கையில் வைத்துக்கொண்டு சந்தோஷமடைய அவர்கள் ஜெயிலிலுள்ள புஷ்பங்களைப் பறித்து வைத்துக்கொள்ள அநுமதிக்கலாம் என்பது ! பர்மாவில் ஜெயில் இன்ஸ்பெக்டர் - ஜெனரலாயிருந்த ஒருவர் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள்கள் மிகுந்த புஷ்டியைத் தரக்கூடியவை என்று பாராட்டி எழுதியிருக்கிருர் ! இந்த வாக்கியங்களில் உண்மை இல்லாமலில்லை. ஆயினும், இவைகளைப் பார்த்து நாம் ஆனந்திக்கும் பொழுது, వ్యాజాత பிரபுவின் குத்திரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/16&oldid=855423" இலிருந்து மீள்விக்கப்பட்டது