பக்கம்:ஜெயில்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயில் டிருக்கிருர், நீதி நிர்வாகத்தை நடத்துகிறவர்களே தண்டனை முறைகளையும் கவனித்து மேற்பார்த்து வருவதால் கொடுமைகள் மறைந்து விடுகின்றன். நாள் தோறும் நீதி முறைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு, முன்னேற்றப் பா ைத க ள் வகுக்கப்படுகின்றன. கைதிகள் சுயமரியாதையுடன் நடத்தப்படுகிருர்கள். ஒவ்வொரு கைதியும் இன்பமாகவும் கெளரவமாகவும் வாழ ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட் டிருக்கின்றன. ைக தி க ளை மானபங்கப் படுத்தும் சட்டங்களோ, காரியங்களோ கிடையா. கைதிகள் தங்களுக்குள்ளேயே சிலரை நியமித்துக்கொண்டு ஜெயிலுக்குள் சுய ஆட்சி நடத்துகிருர்கள். ஒழுங்காக கடக்காத கைதிகளை மற்றக் கைதிகளே சீர்திருத்திக் கொள்ளுகிருர்கள். கைதிகள் ஒய்வு நேரங்களை நல்ல தொழில்கள் செய்வதிலும், கல்வி கற்பதிலும், சினிமா, நாடகம் முதலியவை பார்ப்பதிலும் செலவிடுகிருர்கள். அநேகம் கைதிகள் ஜெயிலிலிருக்கும் போதே சர்வ கலா சாலைகளுக்குப் போய் வகுப்புக்களில் சேர்ந்து படித்துவிட்டு வருகிருர்கள். அவர்கள் வெளியே போப் வரும்போது பாரா ஒன்றும் கிடையாது. அப்படிப் படித்த பல கைதிகள் இப்பொழுது லோவியத் ராஜாங்கத்தில் எஞ்சினிர்களாகவும், வக்கீல்களாகவும், அதிகாரிகளாகவும், தொழில் நிபுணர்களாகவும், தளகர்த் தர்களாகவும் இருக்கிருர்கள். இவை யெல்லாம் நமக்கு மிகுந்த வியப் பா ன விஷயங்கள். இவைகளோடு ஒப்பிட்டால், நம் ஜெயில்களில் கைதிகள் மிருகங்களைப் பார்க்கினும் கேவலமாகவே நடத்தப்படுகிருர்கள் என்பது தெரியும். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/24&oldid=855441" இலிருந்து மீள்விக்கப்பட்டது