பக்கம்:ஜெயில்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் மான தனியிடத்தில் வைக்கவேண்டியது அவசியமாயிற்று. அவர்கள் அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். கிரெய்க் துரை சொர்க்கம்’ என்று வருணித்த அந்தமான் சிறையின் ஆரம்பச் சரித்திரம் இது. எனவே முதன் முதலில் அந்த சேஷத்திரத்தில் காலெடுத்து வைத்த கைதிகள், வெறும் கிரிமினல்கள் என்றழைக்கப்படும் குற்றவாளிகள் அல்லர் ; தேசபக்தர்களும் யுத்தக் கைதிகளுமாவர். அவர்கள் மீண்டும் பிறந்த காட்டைப் பார்க்கவே யில்லை யெ ன் று சொல்லப்படுகிறது. கஷ்டமான வேலைகளையும், விபரீத சீதோஷ்ணத்தையும், நோய்களையும், உணவுக் குறைவையும், வைத்திய வசதிக் குறைவையும் காண்டி அவர்களில் எத்தனை பேர் பிழைத் திருந்தார்களோ தெரியவில்லை. அந்தமானுக்குச் சென்ற இரண்டாவது ராஜீயக் கைதிகளின் படையும் புத்தக் கைதிகளைக் கொண்டது. தீபா அரசனின் தலைமையில் பர்மாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய பர்மியர்களே அந்தக் கைதிக்ள். திபர் மன்னர் தோல்வியுற்று 1885 - ல் சரணடைந்தார். அதற்கு அடுத்த வருஷம் கைதிகள் தீவுக்கு அனுப்பப் பட்டனர். இவர்களில் பிழைத்திருந்தவர்கள் 1919-ல் மாண்ட்-போர்டு சீர்திருத்தத்திற்குப் பின்பு விடுதலை செய்யப்பட்டனர். இதற்குப் பின் அஸ்ஸாம் மாகாணத்து முனிப்பூர் மன்னர் ராஜா குலசந்திராவும், அவருடன் சேர்ந்து கலகஞ் செய்த கூட்டாளிகளும் அந்தமானில் வைக்கப்பட் டிருந்தனர். ராஜா மட்டும் ராஜாங்கக் கைதியாகப் பாவிக்கப்பட்டால் 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/35&oldid=855465" இலிருந்து மீள்விக்கப்பட்டது