பக்கம்:ஜெயில்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் சிப்பாய்கள், கைதி - வார்டர்கள் முதலியோர். இச் சிறைச்சாலை மூன்று மாடியுள்ள கட்டிடம். மொத்தம் எழு பிளாக்குகள் இருக்கின்றன. அ வ ற் றி ல் 700 கைதிகளே அடைக்க முடியும். சட்டப்படி இச் சிறைக்குக் கொண்டுவரப்படும் கைதிகள், மூன்று மாதத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு வெளியே அனுப்பப் படுவார்கள். அவர்கள் உள்ளே யிருக்கும் காலம் சில சமயங்கள் ஆறு மாதம் முதல் இரண்டு வருஷம்வரை நீடித்தாலும் நீடிக்கும். பொதுவாக மூன்று மாதத் திற்குப் பின் வெளியே விடப்படுவார்கள். அவர்கள் பல தீவுகளிலும் பிரித்தனுப்பப் படுவார்கள். பலரை ஒன்று சேர்த்து ஒரு கூட்டமாக அமைத்து, ஒவ்வொரு கூட்டத் திற்கும் ஒரு ஜெயிலரையும், ஒரு டாக்டரையும் நியமிப் ’பார்கள். எல்லாக் கைதிகளும் அது முதல் வெளியே வேலை செய்வார்கள். அவர்களுக்கு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூபா 10 கொடுக்கப்படும். இந்த ரூபா 10 - ம் கைதிகள் கையில் தங்குவதில்லை யென்றும், அதில் பெரும் பகுதி கடினமான வேலைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வேலை வாங்கும் ஆசாமிகளுக்கு லஞ்சமாகக் கொடுக்கப் படுகிறதென்றும் பூரீ. பயங்கராசாரி சொல்லுகிரு.ர். தீவுகளில் ஆங்காங்கே பந்தல் போட்ட கூடங்கள் இருக்கின்றன. கைதிகள் அங்குதான் உணவு வாங்கி உண்ண வந்து கூடுவார்கள். அவர்களுக்கு இடப்பட்ட வேலே முழுவதையும் அவர்கள் செய்து தீரவேண்டும். அளவுக்கு மேலாக வேலை செய்பவர்களுக்கு கூடக் கொஞ்சம் ஊதியம் கிடைக்கும். அவர்கள் மரம் அறுத்தல், காடழித்தல், மண் வெட்டுதல், ரஸ்தா அமைத்தல் முதலிய எத்தனையோ கடினமான வேலைகளைச் 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/37&oldid=855469" இலிருந்து மீள்விக்கப்பட்டது