பக்கம்:ஜெயில்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீவாக்தாம் செய்கிருர்கள். சிறையினுள் அடைபட்டிருக்கும் கைதி களேப் பார்க்கிலும் அவர்களுக்குச் சில விசேஷ உரிபை க ளுண்டு. அவர்கள் கொஞ்சம் சிகரெட், புகையிலை முதலியவை வாங்கிக் கொள்ளலாம். சிறையில் இவை எப்படி யிருக்கும் என்று கூடத் தெரியாது. ஐந்து வருஷம் கடுமையாக உழைத்து, நற்குணமுடையவர்கள் என்று கருதப்படுபவர்கள் இர ண் டாம் வகுப்புக் கைதிகளாக உயர்த்தப்படுவார்கள். அவர்களுக்குச் சாப்பாடு போகக் கூடுதல் படித்தனம் கொடுக்கப்படும். அவர்கள் தங்கள் உணவைத் தாங்களே சமைத்துக் கொள்ளவும் அநுமதிக்கப்படுவார்கள். கன்னடத்தை யுடன் பத்து வருஷம் காண்டிவிட்ட கைதிகள் முதல் வகுப்புக்கு உயர்த்தப்படுவார்கள். அவர்கள் சொந்தத் தொழில் செய்யலாம், கலியாணம் செய்து கொள்ளலாம், சுதந்திரர்களாக வாழலாம். பெண் கைதி ஐந்து வருஷத் தண்டனை அநுபவித்த பின் மணம் செய்து கொள்ளலாம். 1920-க்குப் பின் ஆண் கைதிகள் மூன்று வருஷத் திற்குப் பின் விவாகம் செய்து கொள்ளவும் அநுமதிக்கப் பட்டார்கள். கைதிகளின் உடைகள் இந்தியச் சிறைகளி அள்ளவற்றைப் போலவேதான் : அதே கறுப்புக் கோடிட்ட அரைக் கால் சட்டை, குறைக் கைச் சட்டை, மனிதனை வானரமாக்கும் அதே குரங்குக் குல்லாதான். அங்கமானிலுள்ள கைதிகள் இந்தியாவின் பல மாகாணங்களிலிருந்து சென்றிருப்பதால் அவர்களுடைய சாப்பாடு வெவ்வேறு விதமாயிருக்கும். ஆனல் ஜெயிலில் ரொட்டியும் சோறுமே கொடுப்பார்கள். காலேயில் கொஞ்சம் அரிசிக் கஞ்சி, சாப்பாட்டிற்கு இரண்டு I 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/38&oldid=855471" இலிருந்து மீள்விக்கப்பட்டது