பக்கம்:ஜெயில்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் உழைத்துக் கட்டும்! பயப்பட வேண்டாம்! என்று சொல்லித் தொழிலாளர் க ட ன் வாங்குவது சர்வ சாதாரணம். கங்காணிகள் கடனில்லை யென்று ரொம்ப நிமிர்ந்து நின்ருல், தொழிலாளர் அவர்களை விட்டுப் பிரிய கேரிடும். தவிரவும், இந்தியாவில் கஞ்சி குடித்து வேலை செய்யும் தொழிலாளரும் தோட்டங்களுக்குப் போன வுடன் வாழ்க்கைச் செலவை அதிகரித்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது. காலையில் தேயிலைப் பானம் செய்யாத தொழிலாளர் அபூர்வம். அதுவும் தங்கள் கையாலேயே தினம் பறிக்கும் தேயிலைக் கொழுந்தைப் பருகாமல் இருக்க முடியுமா? தேயிலைப் பானம் அவசிய மால்ை முதலில் வாரத்திற்கு -ராத்தல் சீனியாவது வாங்க வேண்டும். இலங்கையில் விசேஷமாகக் கிடைக்கும் ருசியான உலர்ந்த மீனை வாங்காமல் இருக்க முடியுமா ? அதுதான் ஏழைகளின் விசேஷப் பணியாரம்கூட! முன் காலத்தில் கொழிலாளருக்குப் போர்த்திக்கொள்ளக் கொடுக்கும் கம்பளிகளுக்கு, பற்று கம்பளி ஒன்றுக்கு - பற்று கறுப்புக் கம்பளி ஒன்றுக்கு ' என்று கணக்கு எழுதுவார்களாம். வாங்கிய கம்பளி ஒன்று கணக்கில் எம்பொழுது இரண்டாகிவிடும் என்று கதை சொல் வார்கள். இப்பொழுது இப்படி எல்லாம் இல்லை என்பதை நம்பிக்கொள்வோம். நேர்மையான கணக்குப் படியே கடன் எறிக்கொண்டே போகிறது. முன் காலத்தில் இங்கிருந்து சென்ற லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் கூலிகளைக் கை நீ ட்டி வாங்காமலே இருந்திருக்கிருர்கள். வருஷம் முழுவதும் 12-மாதத்தில் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே சம்பளம் வாங்குவார்கள். மற்ற நாளெல்லாம் அவர்க 48 H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/53&oldid=855505" இலிருந்து மீள்விக்கப்பட்டது