பக்கம்:ஜெயில்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கட்டுரைகள் * இருந்து அமிர்த பஜார் . 1874 முதல் இன்று வரை பிரசுரமாகி வருகிறது. அமிர்த பஜார் பத்திரிகை யின் ஆசிரியராகவும், எழுத்துக் கோப்பவராகவும், அச்சிடுபவராகவும், மை கூட்டுபவராகவும் இருந்த ஸிலிர் குமார் கோவின் தவப் புதல்வர்தான் துஷார் காந்தி கோஷ். இவரே அவருடைய கடைசிக் குமாரரும், ஜீவந்தரா யிருக்கும் ஒரே புதல்வரும் ஆவார். இவர் பத்திரிகையை ஏற்றுக்கொண்டு நடத்தி வந்த காலத்திலும் எத்தனையோ இடையூறுகளும், துன்பங்களும் நேர்ந்தன. 1932 - ல் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாகக் கோர்ட்டை அவமதித்ததாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, ரூபாய் 500 அபராதம் விதிக்கப் பட்டது. 1930 - ம் வருஷத்துச் சட்டமறுப்பு இயக் கத்தின் போதும் அமிர்த பஜார் கடுமையான அடக்கு முறைகளுக்கு உள்ளாயிற்று. ரூபாய் 6,000 ஜாமீன் கட்ட வேண்டும் என்று அதற்கு உத்தரவிடப்பட்டது. அமிர்த பஜார் தோன்றிய காலம் அசாதாரண மான காலம். அக்காலத்தில் இந்தியாவும், முக்கியமாக வங்காளமும், கொடுங் துன்பங்களுக்கு உள்ளாகி யிருந்தன. கோஷ் சகோதரர்கள் பிறப்பிலேயே கர்ம விரர்களாயும், போர் வீரர்களாயும் விளங்கியதால், அஞ்சா நெஞ்சத்துடன் அவர்கள் தேச சேவை செய்ய முடிந்தது. அவர்களுடைய பத்திரிகை தோன்றிய இரண்டு வருஷங் களுக்கு உள்ளாகவே வெளி நாடுகளிலும் அதன் பெயர் தொனிக்க ஆரம்பித்துவிட்டது. 1878 – க்குப் பின் ரஷ்ய அரசாங்கம் அப் பத்திரிகையை வரவழைத்து, அதில் உள்ள முக்கியமான விஷயங்களை மொழிபெயர்த்து 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/75&oldid=855555" இலிருந்து மீள்விக்கப்பட்டது