பக்கம்:ஜெயில்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் யுத்தம் கடந்தது. ஹைதரும் திப்புவும் அடக்கப்பட்டனர். மராட்டியர்களின் உட்பகை எதிரிகளால் நன்கு பயன் படுத்திக் கொள்ளப்பட்டது. கடைசி பீஷ்வா பாஜிராவ் காவலில் வைக்கப்பட்டார். சீக்கியர் 1849- ல்தான் முற்றிலும் அ டக் கப் பட்டனர். அவர்களுடைய விரப் போராட்டங்கள் ஆச்சரியமானவை. ஆயினும் அவை அகில இந்தியச் சுதந்திர புத்தங்கள் அல்ல. சிறுபான்மை வகுப்பினரின் போராட்டங்களாகவே இருந்தன. தேசம் முழுதும் அவர்களுக்கு உதவியாய்ச் செல்லவில்லை. பின்குல் டல்ஹவுஸி காலத்தில் பற்பல வழிகளில் ராஜ்யங்கள் சேகரிக்கப்பட்டு ஆட்சி முறை மிகவும் பலமாய் வேர் ஊன்றியது. ஜான்ஸி, நாகபுரி முதலிய ராஜ்யங்களே அவர் அபகரித்த முறை மிகவும் வெறுக்கப் பட்டது. கொடுமைகள் காரணமாக காட்டில் பகைமை உணர்ச்சி அதிகரித்தது. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்தனர். பட்டாளங்களில் உள்ள இந்திய சிப்பாய்களுக்குச் செய்திகள் அனுப்பப்பட்டன. எங்கும் சதியாலோசனை கடந்தது. சிப்பாய்களிடம் இயற்கையி லேயே மிகுந்த மனக்கொதிப்பு இருந்து வந்தது. அவர்க ளுக்கும் ஐரோப்பிய ஸோல்ஜர்களுக்கும் அளவற்ற வேற்றுமை பாராட்டப்பட்டதை அவர்கள் வெறுத்தனர். காலா பக்கத்திலும் துவேஷம் முற்றியவுடன் பெரிய யுத்தமும் தோன்றியது. 1857-ம் வருஷத்துச் சுதந்திர யுத்தத்திற்கு நேர் நூறு வருஷங்களுக்கு முன்புதான் - அதாவது 1757-ல் 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/87&oldid=855581" இலிருந்து மீள்விக்கப்பட்டது