பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சோழநாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் காழிப்பிள்ளையார்கழுமலத்தில் திருப்பதிகங்கள் பாடி தோணியப்பரை வழிபட்டு வரும் நாட்களில் தமிழகத் திலுள்ள சிவத்தலங்கள் எல்லாவற்றிற்கும் சென்று சிவ பெருமானை வழிபட வேண்டும் என்ற விருப்பம் எழுகின்றது. தமது விருப்பத்தைப் பெற்றோருக்குத் தெரிவிக்கின்றார். இதனை யுணர்ந்த திருத்தந்தையார் * பிள்ளாய், நான் நின்னைவிட்டுக் கணநேரமும் பிரிந்து தரித்திருக்க இயலாது. இருமைக்கும் இன்பமளிக்கும் வேள்வியொன்றையும் செய்ய வேண்டியுள்ளது. ஆதலால் சில நாட்கள் நின்னுடன் போதருவேன்' என்கின்றார். பிள்ளையாரும் தந்தை கருத்திற்கு இசைகின்றார். திருத் தோணிபுரத்திறைவரை வணங்கி அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடைய துணைவியார் மதங்கசூளாமணிதேவியார், திருத்தந்தை யார் இவர்கள் உடன் வர, அடியார்கள் புடைசூழ, திருத்தலப்பயணம் தொடங்குகின்றது. முதலில் கண்ணார் கோயில்" என்ற திருத்தலம் அடைகின்றார். இத்தலத்துப் பெருமான்மீது தண்ணார் 1. கண்ணார் கோயில் (குறுமாணக்குடி): வைத்தீஸ் வரன் கோயிலிலிருந்து 1; கல் தொலைவிலுள்ளது. தகாத முறையில் அகலிகையைப் புணர்ந்ததன் விளைவாகத் தேவேந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் பெண்குறிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/118&oldid=855958" இலிருந்து மீள்விக்கப்பட்டது