பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. ஞானசம்பந்தர் மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலித்தர் ஊனிடை யார்தலை போட்டில் உண்கல னாக உகந்தார் தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக் கானிடை வேடர் வினைக்கும் கற்குடி மாமலை யாரே. - (7) என்பது ஏழாவது திருப்பாடல். கற்குடிப் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு மூக்கீச்சரம்' (உறையூர்) வருகின்றார். சாந்தம் வெண்ணி: {2.12) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலை தொகுத்து இறைவனை வழிபடுகின்றார். இதில், வெந்தநீறு மெய்யில்பூசுவர் ஆடுவர் வீங்கிருள் வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம் அந்தண்மாமான தன்னேரியன் செம்பியன் ஆக்கிய எந்தைமூக் கீச்சரத்தடிகள் , செய்கின்றதோர் ஏதமே. - (6) 40. மூக்கீச்சரம் (உறையூர்): திருச்சிக் கோட்டை இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. நிலையத் தருகிலிருந்தே நகரப் பேருந்து வசதி உண்டு. சோழ மன்னன் ஏறிச் செல்லும் யானையின் தலையை ஒரு கோழி கொத்தியதால் அம்மன்னன் இவ்விடத்தில் தலைநகர மைத்துக் கோழி என்றே பெயரிட்டான். அரசன் உறைவிடம் உறையூராயிற்று. ச ங் க க் காலத்திய வரலாற்றுத் தொடர்புடைய பழம்பதி. சம்பந்தர் பாடல் மட்டும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/137&oldid=855979" இலிருந்து மீள்விக்கப்பட்டது