பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 125. என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். ஊருலாவுபலி" (1, 29) என்ற முதற்குறிப்புடையது இரண்டாவது பதிகம். உம்ப ராலும் உலகின் னவராலும் தம்பெ ருமையளத் தற்கரி யானுர் நண்பு லாவு மறையோர் நறையூரில் - செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. (5). என்பது இதன் ஐந்தாவது திருப்பாடல். கேரியனாகுமல்லன்' (2.87) என்ற முதற்குறிப்புடையது மூன்றாவது பதிகம். இதில், ஒளிர்தரு கின்றமேனி உருவெங்கும் மங்க மாவையார ஆடலரவம் மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்விகிர்தன் விடங்கொள் மிடறன் - துளிர்தரு சோலையாலை தொழில்மேவ வேத மெழிலார வென்றியருளும் களிர்மதி சேருமாட மடவர்களாரு நறையூரின் நம்ப னவனே. - (7). என்பது ஏழாவது பாடல். சித்தீச்வரத்திறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு அரிசிற்கரைப்புத்துர்' வந்தடைகின்றார். மின்னுஞ்சடை மேவின (2.63) என்னும் பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார். - - 19. அரிசிற்கரைப் புத்தூர் (அழகார் புத்துர்) : கும்பகோணத்திலிருந்து 4 கல் தொலைவு. தளர் வெய்திய கிழப்பருவத்திலும் நாள்தோறும் தவிராது முப்போதும் திருமேனி தீண்டிப் பூசிக்கும் புகழ்த்துணை நாயனார் திரு முழுக்காட்டும்போது, ஒருநாள் குடம் நழுவிச் சிவ லிங்கத்தின் மேல் விழுந்து விடுகின்றது. இந்த அபராதத் திற்கு மிகமிக அஞ்சிய நாயனாருக்கு இறைவன் அபயம், அளித்து ஓய்வு கொடுக்கின்றார். அவர் உண்வுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/168&oldid=856013" இலிருந்து மீள்விக்கப்பட்டது