பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 127 ஆவிலைக் தமர்ந்தவன் அரிவையொடு மேவிகன் கிருந்ததொர் வியன்ககர்தான பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச் சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே. (7) என்பது இதன் ஏழாவது பாடல். கலை மலி யகலல்குல்' (1.125) என்ற முதற்குறிப்புடையது மூன்றாவது பதிகம். இதில், முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய் ததிர்கழ லொலிசெய வருகட நவில்பவன் எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி சதிர்பெறு முளமுடையவர்சிவ புரமே. (6) என்பது ஆறாவது பாடல். சிவபுரத்துப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு குடமூக்கு" என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். அரவிரி கோடல் (3.59) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலை புனைந்து கும்பேசுவரரை வழுத்துகின்றார். 21. குடமூக்கு (கும்பேசுவரர் கோயில்) : கும்ப கோணம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து l கல் தொலைவு. பன்னிரண்டு ஆண்டுகட்கொருமுறை நடைபெறும் மகா மகத்தில் (மாமாங்கம் என்று உலக வழக்கிலுள்ள பெரு விழாவில்) கும்பேசுவரர் வெள்ளிக் காளை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளோடு எழுந்தருளி வந்து மகாமகக் குளக் கரையில் தீர்த்தம் கொடுப்பர். அப்பொழுது பல இலட்சக் கணக்கான மக்கள் குளத்துள் முழுவதும் நின்று மூழ்கிச் சேவிப்பர். குளத்தில் நீர் முழுமையும் பல நாட்களாகப் பெரிய எஞ்சின்களால் இறைக்கப்பட்டு முழங்கால் அளவே நீர் இருக்கும்; சேறு ஏற்படாமல் புதுமணல் பரப்பப் பெற் நிருக்கும். இக்குள நீரில் மூழ்குவதால் இந்தியாவிலுள்ள கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணை, பெண்ணை, தண்பொருநை, குமரி முதலிய எல்லாத் தீர்த்தங்களிலும் முழுகும் பலன் கிடைக்கும் என்பது புராண வரலாறு. இதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/170&oldid=856016" இலிருந்து மீள்விக்கப்பட்டது