பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஞானசம்பந்தர் புனமல்கு கொன்றையீர் புலியின் அதனீர் பொலிவார்ந்த சினமல்கு மால்விடையீர் செய்யிர்கரிய கண்டத்தீர் இனமல்கு நான்மறையோர் ஏத்துஞ்சீர்கொள் இடைமருதில் கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. (7) என்பது இப்பதிகத்தின் ஏழாவது திருப்பாடலாகும். இடைமருதூர் ஈசனிடம் விடைபெற்றுக்கொண்டு (தென்) குரங்காடுதுறை என்ற தலத்திற்கு வருகின்றார். பரவக் கெடும் வல்வினை (2.35) என்ற முதற் குறிப்பினை யுடைய திருப்பதிகத்தால் இத்தலத்து இறைவனை ஏத்து கின்றார். விழிக்குந் நூதன்மேலொரு வெண்பிறை சூடித் தெழிக்கும் புறங்காட்டிடைச் சேர்ந்தெரி பாடிப் பழிக்கும் பரிசே பலிசேர்ந் தவனுர்பொன் கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே. என்பது இப்பதிகத்தின் நான்காவது திருப்பாடலாகும். 26. குரங்காடுதுறை (தென்): ஆடுதுறை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. காவிரியாற்றின் தென்கரையிலிருப்பதால் இது தென் குரங்காடுதுறையா யிற்று. வடகுரங்காடுதுறைக்கு வடகிழக்கே உள்ளது இத் தலம். சுக்கிரீவன் வழிபட்ட தலம். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/175&oldid=856021" இலிருந்து மீள்விக்கப்பட்டது