பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 147 தொண்டர், அறையுமூர் சாத்தமங்கை (11) என வரும் தொடர்களால் சிறப்பித்துள்ளார். சில நாட்கள் இப் பதியில் தங்கியும் இருக்கின்றார். - சாத்தமங்கைப் பெருமானிடம் வி ைட பெற் று க் கொண்டு நாகைக் காரோணம்' வருகின்றார். இரண்டு திருப்பதிகங்களால் இறைவனை ஏத்துகின்றார். புனையும் விரிகொன்றை (1.84) என்ற முதற்குறிப்புடையது ஒரு பதிகம். இதில், - ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருளகல்கிச் சேனின் றவர்க்கினஞ் சிங்தை செயவல்லான் பேணி வழிபாடு பிரியாதெழுந் தொண்டர் காணும் கடல்நாகைக் காரோ ணத்தானே. (5) என்பது ஐந்தாவது திருப்பாடல். மற்றோர் பதிகம் :கூனற்றிங்கட் குறுங்கண்ணி (2.116) என்ற முதற்குறிப் புடையது. இந்தச் செந்தமிழ்ப் பாமாலையில், விடைய தேறிவ் விடவர வசைத்தவ் விகிர்தரவர் படைகொள் பூதம் பலபாட ஆடும் பரமாயவர் உடைகொள் வேங்கை புரிதோ

  • லுடையார்க் கிடமாவது

க்டைகொள் செல்வங் கழிசூழ் - . கடல்நாகைக் காரோணமே. (6) என்பது ஆறாவது வாடா நறுமலர். 44. நாகைக் காரோணம் (நாகபட்டணம்) : நாகப் பட்டணம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. ஒரு முனிவரை காயத்தோடு (உடலோடு) வானுலகுக்கு ஆரோஹணம் செய்யும்படி இறைவன் அருளியதால் காயாரோஹணம் என்பது மருவிக் காரோணம் எனத் தலப் பெயருட் சேர்ந்தது. அதிபத்த நாயனார் அவதரித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/190&oldid=856038" இலிருந்து மீள்விக்கப்பட்டது