பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 157, தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில் அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடையவன் றெழுந்த வஞ்ச கஞ்சணி கண்டர் வர்த்தமா னிச்சரத் தாரே. (7). என்பது ஏழாம் பாடல். இப்பதிகத்தில் முருகநாயனார். மலர்களைச் சாத்தி வழிபட்ட திருத்தொண்டினைக் 'குறியறிமுருகன் செய்கோலம்’ - (3): என்றும், 'முருகன் முப்போதுஞ் செய் முடிமேல் வாசமா மலருடையார்’ (5). எனவும் வரும்தொடர்களால் சிறப்பிக்கின்றார். இந்நிலையில் நாவுக்கரசர் திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமானைப் போற்றிப் புகலூர் வருகின்றார். அரசரது வருகையை உணர்ந்த பிள்ளையார் அடியார் குழு. வுடன் அவரை எதிர்கொண்டழைக்கின்றார். இருவரும் முருக நாயனார் திருமடத்தில் அளவளாவியிருக்கின்றனர். பிள்ளையார் அரசரை நோக்கி, அப்யரை இங்கு சந்திக்கப் பெறும் பேரருளுடையோம் யாம். ஆருரை எப்பரிசால் தொழுதுய்ந்தது?" என வினவுகின்றார். நாவுக்கரசர் தாம். திருவாரூரில் கண்ட திருவாதிரைத் திருவிழாவின் சிறப்பினை முத்துவிதானம் (4-21) என்ற திருப்பதிகத்தால். விரித்துரைக்கின்றார். கணியார் சேயார் கல்லார் தியார் நாடோறும் பிணிதான் திரும் என்று பிறங்கிக் கிடிப்பாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/200&oldid=856049" இலிருந்து மீள்விக்கப்பட்டது