பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ஞானசம்பந்தர் மாலா யிரங்கொண்டு மலர்கண் ணிட ஆழி ஏலா வலயத்தோ டிந்தா னுறைகோயில் சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள் மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே. (6) என்பது ஆறாம் பாடல். இருபெரும் சமய குரவர்கள் திருவிழிமிழலையில் தங்கி யிருந்த காலத்தில் மழையின்மையால் பஞ்சம் நேரிடு. கின்றது. உயிர்களெல்லாம் பசியால் வருத்த முறுகின்றன. சிவனடியார்களை மட்டிலும் இப் பசி விட்டு விடுமா? சிவனடியார்கள் பசியால் அல்லல் படும் நிலையை சம்பந்தரும் நாவரசரும் கண்டு கண்ணுதலோன் திரு. நீற்றுச் சார்வினோர்க்குங் கவலை வருமோ என்று சிந்தித்து சிவபெருமானின் திருக் கழல்களை நினைந்த வண்ணம் துயில்கின்றனர். இந்நிலையில் விழிமிழலைப் பெருமான் அவர்கள் கனவிலும் தோன்றி, நீங்கள் கால நிலைமையால் மனத்தில் வாட்டமடைந்துள்ளீர். ஆயினும் உங்களை வழிபடும் அடியார்களின் துயரினை நீக்கும் பொருட்டு இப்பஞ்சம் நீங்கும் அளவும் நாம் நாள்தோறும் இத் திருக்கோயிலின் கிழக்குப் பீடத்திலும் மேற்குப் பீடத்திலும் ஒவ்வொரு பொற்காசு நுமக்குத் தருகின்றோம். பஞ்சம் நீங்கியபின் அக் காசு நுமக்குக் கிடைக்கா து' என்று சொல்லி மறைந்தருள்கின்றார். ஆளுடைய பிள்ளையார் துயில் உணர்ந்தெழுந்து இறைவனருளைப் போற்றித் திருநாவுக்கரசருடன் திருக்கோயிலிற் புகுந்தபோது கிழக்குப் பீடத்தில் பொற்காசு இருத்தலைக் காண்கின்றார். வியப் படைந்து திருவருளைத் தொழுகின்றார். அக்காசினை எடுத்துக்கொண்டு, :இறைவனடியாரானார் யாவரும் வந்து உண்பார்களாக என்று இரண்டு வேளைகளிலும் பறைசாற்றி அறிவிக்கின்றார். அங்ங்னமே, அவர் திரு மடத்தில் வரும் அடியார் அனைவருக்கும் திருவமுது அளிக்கப் பெறுகின்றது. நாவுக்கரசரும் மேற்குப் பீடத்தில் வைக்கப்பெறும் காசினை எடுத்து அவ்வாறே சிவனடியார் களுக்கு நாடோறும் திருவமுது அளித்து வருகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/233&oldid=856109" இலிருந்து மீள்விக்கப்பட்டது