பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 ஞானசம்பந்தர் அடியேங்கள் அளவிறந்த தவமுடையேம்' என்று கூறிப் போற்றுகின்றனர். இவர்களுக்கு அருளுரை வழங்கி திருக் கோயிற் புறம் போந்து குலச்சிறையார் ஏற்பாடு செய்த திருமடத்தில் அடியார்களுடன் எழுந்தருளுகின்றார். அரச யாதேவியின் ஆணையின்படி குலச்சிறையார் பிள்ளை யார்க்கும் அவருடன் போந்த அடியார்கட்கும் நல்விருந்து அளித்து மகிழ்கின்றார். கண்டு முட்டு - கேட்டு முட்டு : பகற்பொழுது கழிந்து இராப்பொழுது வந்துறுகின்றது. சம்பந்தப் பெருமானுடன் வந்த அடியார்கள் பாடும் திருப்பதிகங்களின் இன்னிசை முழக்கம் மதுரை மாநகரெங்கும் பரவுகின்றது. இது சமணர் களின் அடிவயிற்றைக் கலக்குகின்றது. இது பொறாத சமணர்கள் குழுவாக அரசனைச் சந்தித்து : மதுரையில் சைவ மறையாளர்கள் கூட்டமாக வந்திருத்தலைக் கண்ட மையால் உண்ணாநிலையை அடைந்தோம்' என்பதை அறிவிக்கும் முறையில் யாங்கள் கண்டு முட்டு என்கின் றனர். இத் துன்பச் செய்தியைக் கேட்டமையால் யானும் உண்ணா நிலைமையினேன் ஆயினேன்' என்பான் யானும் கேட்டு முட்டு' என்கின்றான். திருமடத்தில் தீ : காழிப்பிள்ளையாரின் வருகையைக் கேள்வியுற்ற மன்னன் சினமுறுகின்றான். சிவனடியார்கள் இங்கு வந்திருப்பதன் நோக்கம் யாது?’ என வினவு கின்றான். சோழநாட்டில் சீகாழிப்பதியில் பிறந்த பார்ப்பனச் சிறுவன் சிவனிடத்தில் ஞானம் பெற்றதாகச் சொல்லிக்கொண்டு முத்துச்சிவிகையில் ஏறியமர்ந்து எங்களை வாதில் வெல்லும் நோக்குடன் அடியார்களோடு இங்கு வந்துள்ளான்' என்று மறுமொழி தருகின்றனர் சமணர்கள். இதற்கு நாம் என்ன செய்யலாம்?" என்று அவர்களை யோசனை கேட்கின்றான் மதிகெட்ட மன்னன். அவ்வந்தனச் சிறுவன் தங்கியிருக்கும் மடத்தில் மந்திர விச்சையினால் தீப்பற்றும்படி செய்வோமானால் அவன் நகரைவிட்டு ஓடிவிடுவான்' என்கின்றனர். ஆவதொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/247&oldid=856140" இலிருந்து மீள்விக்கப்பட்டது