பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைமா நகர் அற்புதங்கள் 215 ஆனை மாமலை யாதியாய இடங்க ளிற்பல அல்லல்சேர் ஈனர் கம்கெளி யேனலேன் திருவால வாயரன் கிற்கவே. (1) என்பது இப் பதிக முதற் பாடல். இதில், மேற் கூறிய கருத்தினைக் கண்டு மகிழலாம். ஒவ்வொரு பாடலிலும் * எளியேனலேன் திருவாலவாய் அரன் நிற்கவே என்று முடிவதிலிருந்து ஆலவாயரன்" பிள்ளையார் உளத்தில் நன்கு நிலைபெற்றிருப்பதைக் கண்டு தெளியலாம். பாண்டியன் பிள்ளையாரையும் நோக்கி, நீங்கள் என் வெப்பு நோயைத் தீருங்கள்; தீர்த்தவர் எவரோ அவரே வாதில் வென்றவர்' என்று விதியமைக்கின்றான். ஆண் மக்களுக்கு இடப்பாகத்திலுள்ள நோயைத் தீர்த்தல் எளிதென உணர்ந்த அமணர்கள், மின்னனை நோக்கி, வேந்தனே, தினது வாம (இடப்) பாகத்தை எங்கள் சமய மந்திரத்தால் தீர்ப்போம்' என்று சொல்லி இடப் பக்கத்தைப் பீலிகொண்டு தடவுகின்றனர். இதனால் மன்னனுக்கு முன்னையினும் சுரநோய் அதிகரிக்கின்றது. இது கண்ட மன்னன் பிள்ளையாரை நோக்க, அக்குறிப் பறிந்த பிள்ளையார் அவனது வலப்பாகத்தை அடைந்து "மந்திரமாவது நீறு" (2:66) என்ற திருப்பதிகம் ஒதித் தென்னவன் மேனியில் திருவளர் நீறு கொண்டு பூசுகின்றார். இப்பதிகத்தின் முதற் பாடல், மந்திர மாவது நீறு; வானவர் மேலது றுே: சுந்தர மாவது நீறு, துதிக்கப் படுவது நீறு: தந்திர மாவது நீறு, சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கண் திருவால வாயான் திருகிறே. (1) என்பது. இந்நிலையில் வலப்பாகத்தில் வெம்மை நீங்கு கின்றது. இடப்பாகத்தில் முன்னையினும் வெப்பம் இருமடங்காக அதிகரிக்கின்றது. இது கண்டு அருகர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/256&oldid=856161" இலிருந்து மீள்விக்கப்பட்டது