பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 ஞானசம்பந்தர் மேற்குறிப்பிட்ட வன்னியும் அத்தமும் என்ற பதிகத்தின் திருக்கடைக் காப்பில் ஏடு சென்று அனை தரும் ஏகத் தொருவனை என வரும் தொடரால் தெளிவாகப் புலனாதல் கண்டு மகிழலாம். இன்னொரு சான்றும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பதிகம் புனல் வாதத்தில் வைகையாற்றில் எதிரேறிச் செல்லுமாறு ஏட்டில் எழுதி இடப்பட்டது என்பதற்கு இப்பதிகப் பாசுரமே (11) சான்றாக அமைகின்றது. அற்றன்றி யந்தண் மதுரைத்தொகை யாக்கினானும் செற்றென்று தெய்வந்தெளியார் கரைக்கோலைத் தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வி னுரவும் பண்புநோக்கில் பெற்றொன் றுயர்ந்த பெருமான் பெருமானுமன்றே. என்ற பாசுரத்தில் இச்சான்றினைக் காணலாம். இங்ங்னம் காழிப் பிள்ளையார் வைகையில் இட்ட ஏடு அந்நதியினில் எதிரேறிச் சென்ற நிகழ்ச்சி, பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுநிலை யவையெதிரே வருந்தி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே (3.113: 82) எனவரும் திருக்கழுமலத் திருவியமகப் பதிகத்தின் (3.113) திருக்கடைக் காப்பில் பிள்ளையார் தெளிவாகக் குறிப் பிட்டிருத்தலைக் கண்டு மகிழலாம். - ഔങ്ങ് கழுவேறல்: நின்றசீர் நெடுமாறன் தன் அமைச்சரை நோக்கி, வாதிற் சூளுரைத்துத் தோல்வியுற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/263&oldid=856175" இலிருந்து மீள்விக்கப்பட்டது