பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு 231 வளர்பூங் கோங்கம் மாதவியோடு மல்லிகைக் குளிர்பூஞ் சாரல் - வண்டறைசோலைப் பரங்குன்றம் தளிர்போல் மேனித் தையல்கல்லா ளோடொருபாகம் களிர்பூங் கொன்றை சூடினன்மேய நகர்தானே. (4) என்பது நான்காவது பாடல். இத்தலத்தை வழிபடுவோர் அடையும் பலனை, சித்தம் தொன்றிச் செய்கழல் உன்னிச் சிவனென்று கித்தலும் ஏத்தத் தொல்வினை - நம்மேல் கில்லாவே, (8) என்ற பாடற்பகுதி தெரிவிக்கின்றது. பரங்குன்றுப் பரமனிடம் விடை பெற்றுக் கொண்டு ஆப்பனுர்’ என்ற திருத்தலம் எழுந்தருள்கின்றார் பிள்ளையார். இத்தலத்து எம்பெருமானை முற்றும் சடை முடி’ (1.88) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடித் துதிக்கின்றார். இதில், பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில் துணியி னுடைதாழச் சுடரேந்தி யாடுவான் 3. ஆப்பனுர் (திருவாப்புடையார் கோயில்): மதுரை இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. வையை யாற்றின் வடகரையிலுள்ளது. ஆற்று வெள்ளத்தால் தடைப் பட்ட பாண்டிய மன்னன் ஆப்பு ஒன்றைத் தாபித்து சிவ பூசை செய்தமையால் தலப் பெயர் இப்படி ஏற்பட்டது. சம்பந்தர் மட்டிலுமே பாடிய தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/272&oldid=856196" இலிருந்து மீள்விக்கப்பட்டது