பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (3) 253, (இஃது இரண்டாம் முறை வழிபட்ட தலம்) இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). நெய்த்தானத்திறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு ஐயாறு வருகின்றார். இங்கு இவரது வருகை இரண்டாவ தாயினும் மூன்று பதிகங்களால் இப்பொழுதும் வழிபடு . கின்றார். கலையார் மதி" (1.36) என்ற முதற்குறிப்புடையது முதற்பதிகமாகும். தலையின் தொடைமாலை யணிந்து கலைகொண்ட தொர்கையினர் சேர்வாம் கிலைகொண்ட மனத்தவர் நித்தம் மலர்கொண்டு வணங்கும் ஐயாறே. (6). என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். அடுத்த பதிகம் *பணிந்தவரரு (1.120) என்ற முதற்குறிப்புடையது. இதில், வானமர் மதிபுல்கு சடையிடை யாவொடு தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன் மானன மென்விழி மங்கையொர் பாகமும் ஆனவன் வளங்க ரந்தனையாறே. (5) என்பது ஐந்தாவது பாடல். மூன்றாவது பதிகம் திருத்திகழ்" (2.32) என்ற முதற்குறிப்புடையது. பூதமொடு பேய்கள்.பல பாடகட மாடிப் பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக் கோதையர் இடும்பலி கொளும்பர னிடம்பூ மாதவி மணங்கமழும் வண்திரு வையாறே. (6). என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். 21. முதல் வருகை - கட்டுரை 5 காண்க. திருத்தலக் குறிப்பு பற்றி - அடிக்குறிப்பு 27 காண்க. இந்நூல் பக். 86, காண்க. - r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/294&oldid=856248" இலிருந்து மீள்விக்கப்பட்டது